உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதல்!
எனக்காக ஒரு வீடுகூட நான் கட்டியதில்லை: பிரதமர் மோடி
தனக்காக ஒரு வீடுகூட கட்டியதில்லை என தில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தலைநகர் தில்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் உள்பட பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன. 3) தொடங்கிவைத்தார்.
அசோக் விஹார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு வீட்டிற்கான சாவிகளை பிரதமர் மோடி வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,
'பிரதமர் மோடி தனக்காக ஒரு வீடுகூட கட்டியதில்லை என இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக நான் 4 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கி அவர்களின் கனவை நனவாக்கியிருக்கிறேன். நான் எனக்காக மாளிகை கட்டியிருக்க முடியும். ஆனால் மக்களுக்கு வீடு கொடுப்பதே எனது கனவு' என்று கூறினார்.
பிரதமர் மோடி பேசும்போது தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை குறிப்பிடும்பொருட்டு மாளிகை(Sheesh Mahal) என்றார்.
தில்லி முதல்வராக இருந்தபோது கேஜரிவால், தனது அரசு பங்களாவை புதுப்பிக்க ரூ. 45 கோடி செலவழித்ததாக சர்ச்சை எழுந்தது.இதனை மறைமுகமாக விமர்சிக்க பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.
மேலும் விழாவில் பேசிய மோடி, 'தில்லி பேரிடரில் உள்ளது. ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளில், ஏழை மக்களுக்கான நிதியில், பள்ளி குழந்தைகளுக்கான நிதியில் அவர்கள் ஊழல் செய்து வருகிறார்கள். ஆம் ஆத்மியை ஆட்சியில் இருந்து விடுவிக்க தில்லி மக்கள் முடிவு செய்துவிட்டனர்' என்றார்.