மும்பையில் சோட்டா ராஜனின் உதவியாளர் கைது
32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சோட்டா ராஜனின் உதவியாளரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் உதவியாளர் ராஜு விகன்யா என்கிற விலாஸ் பல்ராம் பவார். இவர் மீது மும்பையில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கடத்தல், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தது என்பன உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
பிரதமர் மோடி வீட்டில் கன்றுக்குட்டி: ஆர்டிஐ-ன் கீழ் பதில் அளிக்க மறுப்பு!
இந்த நிலையில் அவர் வியாழக்கிழமை மும்பையின் செம்பூர் பகுதியில் காணப்பட்டதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனே அங்கு சென்ற மும்பை காவல்துறையினர் விலாஸ் பல்ராம் பவாரை கைது செய்தனர். பின்னர் அவரை மும்பையில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
கைதான விலாஸ் பல்ராம் பவார் கடந்த 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.