செய்திகள் :

சென்னையில் மலர்க் கண்காட்சி: முதல்வர் திறந்து வைக்கிறார்!

post image

சென்னையில் 4வது ஆண்டாக நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள்(ஜன. 2) தொடக்கி வைக்கிறார்.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த மலா்க் கண்காட்சி, முதல் முறையாக கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது.

சென்னை செம்மொழி பூங்காவில் தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை சாா்பில், கடந்த 3 ஆண்டுகளாக மலர்க் கண்காட்சி தொடா்ந்து நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டும் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: 2024 - அதிகரித்த ரயில் விபத்துகள்!

இதையொட்டி, சென்னை கண்காட்சிக்குத் தேவையான மலா்ச் செடிகளை உற்பத்தி செய்யும் பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்தக் கண்காட்சிக்கு நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மலா்ச் செடிகள் உற்பத்தி செய்து, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி, ஜனவரி 2 ஆம் தேதி முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை இந்த மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் மக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ. 150, சிறியவர்களுக்கு ரூ. 75-ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

30 லட்சம் மலர்த் தொட்டிகளுடன் மலர்கள் கொண்டு வரப்பட்டு மலர்க் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனக்காக ஒரு வீடுகூட நான் கட்டியதில்லை: பிரதமர் மோடி

தனக்காக ஒரு வீடுகூட கட்டியதில்லை என தில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார். தலைநகர் தில்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் உள்பட பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன. 3) தொட... மேலும் பார்க்க

பாக்: முகநூல் காதலியை மணக்க சட்டவிரோதமாக நுழைந்த இந்தியருக்கு சிறை!

முகநூலில் பழக்கமான பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை மணப்பதற்காக சட்டவிரோதமாக அந்நாட்டிற்குள் நுழைந்த இந்தியர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த படால் பாபு என்ற ... மேலும் பார்க்க

தொடங்கிய முதல் வாரத்திலேயே டிஆர்பியில் அசத்தும் எதிர்நீச்சல் - 2 தொடர்!

எதிர்நீச்சல் - 2 தொடரின் முதல் வார டிஆர்பி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் டிச. 23 ஆம் தேதி முதல் வாரத்தி... மேலும் பார்க்க

காற்றாடும் விமான நிலையங்கள்!

நாட்டில் சிறிய நகரங்களில் சமீப ஆண்டுகளில் திறக்கப்பட்ட விமான நிலையங்கள் பெரும்பாலும் செயலற்ற நிலையிலே காணப்படுகின்றன. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விமானப் போக்குவரத்தை கொண்டுவரும் பொருட்டு சிறிய நக... மேலும் பார்க்க

உ.பி: இரட்டை கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புத்தாண்டு நாளன்று மதுபானக் கடையில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி சுட்டுப்பிடிக்கப்பட்டார்.அம்மாநிலத்தின் பல்லியா மாவட்டத்தில் கட... மேலும் பார்க்க

பொங்கல்: தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவர்ப்பதற்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி - தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப... மேலும் பார்க்க