மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது, ஆனால்.... ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?
உ.பி: இரட்டை கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் புத்தாண்டு நாளன்று மதுபானக் கடையில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி சுட்டுப்பிடிக்கப்பட்டார்.
அம்மாநிலத்தின் பல்லியா மாவட்டத்தில் கடந்த ஜன.1 அன்று பிரஷாந்த் குப்தா (வயது-23) இவர் பிகார் மாநிலம் பாட்னாவில் எலக்ட்ரிஷியனாக பணியாற்றி வந்தார். இவர் தனது 2 வயது மகனின் பிறாந்தநாளைக் கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிராஷ்ந்த் அவருடைய நண்பரான கோழு வர்மா (24) என்பவருடன் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஜன.1 அன்று அங்குள்ள மதுபானக் கடைக்கு மது வாங்கச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு இருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதில், அவர்கள் இருவரும் கோடாலியாலும் கூர்மையான ஆயுதங்களினாலும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பலியானவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஷிவம் ராய், பிட்டு யாதவ், பிரியான்ஷு ராய் மற்றும் ருதேஷ் ராய் ஆகியோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுது. மேலும், தப்பியோடிய முக்கியக் குற்றவாளியான சிவம் ராய் என்பவரைத் தேடி வந்தனர்.
இதையும் படிக்க: கணவரைக் கொன்று உடலை 2 துண்டுகளாக வெட்டிய மனைவி!
இந்நிலையில், இன்று (ஜன.3) சிவம் ராய் இருக்குமிடம் பற்றி காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு சிவம் ராய் மறைந்திருக்கும் இடம் கண்டுப்பிடிக்கப்பட்டு அவர் சுற்றிவளைக்கப்பட்டார்.
அப்போது காவல்துறையினர் தன்னை சுற்றிவளைத்திருப்பதை உணர்ந்த சிவம் ராய் அவ்ர்களை நோக்கி தனது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளார்.
அதற்கு காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில், சிவம் ராயின் காலில் குண்டு பாய்ந்தது. பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவரிடமிருந்து ஒரு துப்பாக்கியும், அதன் தோட்டாக்களும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாலியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இளைஞர்கள் இருவரும் கொல்லப்பட்டதிற்கு எதிர்பு தெரிவித்து நேற்று (ஜன.2) கோட்டா பகுதியிலுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. மேலும், கிராமவாசிகள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் நேற்று இரவு பலியான இருவரது உடலும் மிகுந்த பாதுகாப்போடு தகனம் செய்யப்பட்டது.