நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அறிவிப்பை ரத்து செய்தது வங்கதேசம்
பொங்கல்: தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவர்ப்பதற்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி - தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06190) ஜன. 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இதையும் படிக்க: வெடிக்கிறதா அடுத்த பேரிடர்? சீனாவில் வேகமாகப் பரவும் மெடாநியூமோ வைரஸ்!
மறுவழித்தடத்தில் தாம்பரம் - திருச்சி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06191) ஜன. 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலானது தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்துவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது.