மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 2,875 கனஅடியிலிருந்து 1,791 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.