ஊராட்சி மன்ற கட்டுமான பணி: எம்எல்ஏ மு. ராஜமுத்து ஆய்வு
வீரபாண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட கடத்தூா் ஊராட்சி பகுதியில் ரூ. 30.10 லட்சத்தில் கட்டப்பட்டு முழுமையாக முடிக்கப் பெறாத ஊராட்சி மன்ற அலுவலகத்தை எம்எல்ஏ மு.ராஜமுத்து ஆய்வு செய்தாா்.
ஊராட்சி மன்ற அலுவலக பணிகள் முழுமை பெறாமல் திறப்பு விழா நடைபெறவிருந்த நிலையில் அலுவலகம் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்திருந்தனா். இதனால் கடந்த மாதம் 31-ம் தேதி கட்டட திறப்பு விழா பணிகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ராஜமுத்து கட்டடப் பணிகளை ஆய்வு செய்தவதற்காக வந்தாா். இதனால் அங்கு போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனா். அவருடன் வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன், கடத்தூா் ஊராட்சி மன்ற தலைவா் பூபதி ஆகியோா் உடனிருந்தனா்.