Gold Price : 'புத்தாண்டின் தொடக்கம்... முதல் நாளிலே உயர்ந்த தங்கம் விலை' - எவ்வள...
2 மாநிலங்களைக் கடந்த பெண் புலியைப் பிடிப்பதில் சிரமம்?
ஒடிசா மாநிலத்திலிருந்து தப்பித்த பெண் புலியைப் பிடிக்க வனத்துறை காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் சிமிலிப்பால் வனப்பகுதியிலிருந்து தப்பித்து மேற்கு வங்கத்தின் பாங்குரா வனப்பகுதியினுள் நுழைந்த பெண் புலியைப் பிடிக்க அப்பகுதியின் அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலம் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்திலிருந்து ஒடிசாவின் சிமிலிப்பால் வனப்பகுதிக்கு ஜீனத் எனும் பெண் புலியானது கொண்டுவரப்ப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் அப்பகுதியிலிருந்து தப்பித்த அந்த புலியானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் வனப்பகுதிகளை கடந்து தற்போது மேற்க்கு வங்கத்தின் பாங்குரா வனப்பகுதியில் சுற்றித் திரிவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த வனப்பகுதியைச் சுற்றியுள்ள பாதைகள் அடைக்கப்பட்டு அந்த புலியைப் பிடிக்கும் பணியில் 150 வனத்துறை அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர். மேலும், அந்த புலி இருக்கும் இடம் கண்டறியப்பட்டு அதற்கு சில கிலோமீட்டர் சுற்றளவிற்கு பிளாஸ்டிக் வலை அமைக்கப்பட்டு அந்த புலி மேலும் நகராமல் தடுக்கப்பட்டது.
இதையும் படிக்க: 3ஆவதும் பெண் குழந்தை: மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கணவர்
இன்று (டிச.29) காலை நிலவரப்படி அந்த புலியின் மீது அதை செயலிழக்க செய்யும் மருந்து செலுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் மயக்க மருந்து செலுத்த கால்நடை மருத்துவர்களின் அனுமதிக்காக வனத்துறையினர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பாங்குரா வனப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, அந்த புலியின் நடமாட்டத்தை டிரோன்கள் மூலம் கண்கானித்து வருவதாகவும். ஆனால், அடர்த்தியான காடுகள் அதற்கு தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.