நாக மாணிக்கம் - சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
அந்த இட்டேரி முழுவதும் கூட்டம் கூட்டமாய் பாம்புகள்., பல வகையான பாம்புகள்., அதன் பெயர்கள் எனக்கு அப்போது தெரியாது. பின்னர்தான் தெரிந்து கொண்டேன் நாகம்.,சாரைகள். கட்டு விரியன்,கரு நாகம்.
நான் ஒன்று இரண்டு 50 வரை கற்றுக்கொண்டது அந்த பாம்பு குஞ்சு கூட்டங்களில் தான்! நான் முள் குச்சியில் பாம்புகளை கிளறி எண்ணுவேன்.
இளம் கன்று பயமறியாது!
கோடை மழையில் இந்த பாம்பு கூட்டங்கள் அதிகம் தென்படாது ஆடி முதல் புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதம் பெய்யும் அடை மழையில் தான் அதிகம் தென்படும் காலை நேரங்களில் தான் இந்த பாம்பு குட்டிகள் தென்படும்.
நான் குஞ்சு பாம்புகளை முள் குச்சியில் தள்ளி என்னும் போது தாய்நாகங்கள் வேலியின் அருகில் படமெடுத்து கண்காணிக்கும் ஆனால் அவை என் அருகே வந்ததில்லை அவற்றை பற்றிய பயம் எனக்கு அப்பொழுது இருந்திருக்கவில்லை.,
எங்கள் குடும்பம் அங்கே குடி பெயர்ந்த போது எனக்கு வயது 5. என்னுடைய ஒன்றாம் வகுப்பு படிப்பு அந்த விவசாயமும், நெசவும் பிரதானமாக கொண்ட அந்த கிராமத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது.
அது 1960 ம் ஆண்டு,
அந்த கிராமத்தை சுற்றி விவசாய நிலங்கள். அந்த கிராமத்தின் முக்கிய தொழில்கள், விவசாயமும்., கைத்தறி நெசவும்தான்.
நாங்கள் அந்த கிராமத்தை ஒட்டியுள்ள ஒரு தோட்டத்தில் குடியிருந்தோம். தோட்டம் 10 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது கவளை பாசனம்.
அப்பொழுதெல்லாம் மின்சாரம், மோட்டார் பம்ப் செட்டெல்லாம் கிடையாது, கவளை பாசனம் என்பது கிணற்றின் மேட்டிலிருந்து 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தோல் பையை கயிற்றின் மூலம் கிணற்றில் இறக்கி கிணற்று மேட்டிலிருந்து இரண்டு காளைகளை பூட்டி சரிவான பள்ளத்துக்கு காளைகளை பாய்ச்சும் பொழுது தோல் பை மேலிருந்து இழுக்கப்பட்டு அதன் கூம்பு போன்ற மறு பக்கத்தில் நீர் 200 லிட்டர்கள் ஒரு இரண்டாயிரம் லிட்டர் கொண்ட தொட்டியில் பாய்ச்சப்பட்டு தொட்டி வழிந்து விளை நிலங்களுக்கு நீர் சீராக சென்றடைந்தது.
பத்தடிக்கு பத்தடி சரிசமமாக நீர் தேங்கும்படி கட்டப்பட்ட நூற்றுகணக்கான பாத்திகளுக்கு செலுத்தப்பட்டது, விதை வளரும் பயிர்களுக்கான பாத்திகளுக்கு இந்த கவளை பாசனத்திலேயே நீர் இறைக்கப்பட்டது. மின்சாரம் இல்லாத காலங்களிலேயே லட்சக்கணக்காண ஏக்கர்களில் இவ்வாறே பயிர் செய்யப்பட்டது.
அந்த தோட்டத்தின் வடபுறம் கிராம வண்டிப் பாதை அதையொட்டி செம்மண் குட்டை., ஆறுமாதங்கள் அந்த குட்டைகள் நிரம்பி வழியும். அந்த நிரம்பி வழியும் நீர் அந்த கிராமத்தின் குளத்தையடைந்தது. குளத்தில் நிரம்பி வழியும் நீர் இட்டேரி பாதை வழியே பயணித்து அருகிலுள்ள ஆற்றையடைந்தது.
குட்டைகளில் மழைகாலங்கள் முடிந்த உடன் விவசாயிகள் அந்த குட்டைகளில் களிமண்ணை எடுத்து பயிர்களை அறுவடை செய்து பின்பு மலடாகும் நிலத்திற்கு கன்னி தன்மையை கொடுப்பார்கள்.
கிராமத்து சாலைகள் ஜல்லி போட்ட மெட்டல் சாலைகளில் பெரிய மழை பெய்தாலும் இட்டேரிகளின் வழியாக சென்றடைந்தது. மழை நீரால் சேதாரமோ வெள்ளமோ கிடையாது. மழை நின்றதும் அரை மணி நேரத்தில் ஒரு சொட்டு நீர் வீதிகளிலே, சாலைகளிலோ தேங்காது.
நம்முடைய நீர் மேலாண்மை மிக பெரியது கங்கையாகட்டும் காவிரியாகட்டும் அவற்றை நம் முன்னோர்கள் சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர். வீராணம் ஏரி ராஜராஜனுடைய தாத்தா அமைத்தது.
அதற்க்கு 900 ஆண்டுகள் முன்பே கல்லணையை கரிகாலன் கட்டிவிட்டான். தஞ்சை தரணியை முழுவதும் காவிரி ஆட்கொண்டு ஆன்மீகத்தை வளர்தெடுத்தாள்.
நீரின்றி அமையாது உலகு.
காவிரி கொண்டு வரும் வண்டல் மண்ணாலேயே அளப்பர்கறிய தானியங்களை (உணவுகளை ) நமக்கு கொடுத்தும் தஞ்சை தரணி கன்னித்தன்மையுடன் உள்ளது.
இட்டேரி பாதை என்பது தோட்டங்களை இணைக்கும் சாலை. அதில் வருடத்திற்கு 6 மாதங்கள் செம்மண் நீராகவும் பின் பளிங்கு நிற நீர் அந்த இட்டேரி பாதையில் ஒரு துண்டின் அகலத்திற்கு ஓடிக்கொண்டிருக்கும்.
நான் தினமும் அதிகாலையில் பால் வாங்க எங்கள் தோட்டத்து சாலையின் எதிரே இருந்த ஆவாரம்பூ குட்டையைச் சுற்றி இட்டேரி தடத்தின் வழியே நடந்து பள்ளந்தோட்டத்திற்கு சென்று பால் வாங்கி வருவேன்.
இது மழை, குளிர் எதையும் பொருட்படுத்தாது நடைபெற்றது. சாணத்தி ஆத்தாவிடம் 60லிருந்து 65 வரை 5 வருடங்களாக தினமும் தொடர்ந்து பால் வாங்கி வந்தேன்.
பள்ளந்தோட்டம் ஒரு பாறை குட்டையை அடுத்து அமைந்திருந்தது. பாறை குட்டை இயற்கையாக அமைந்திருந்தது. சுற்றுபுற நாணல் காடுகள் தோட்டங்களிலிருந்து இட்டேரி பாதைகள் வழியாக வரும் மழை நீர் அந்த குட்டையை நிரைத்து பின் இட்டேரி பாதை வழியாக வெளியேறும்.
கோடைகாலங்களில் அந்த பாறை குட்டை வறண்டு தவளைகளும் பாம்புகளும் இருக்கும். 100 அடிக்கும் கீழே உள்ள பாசி படர்ந்த நீர் ஒரு பிளமாகவே தெரியும்.
பள்ளந்தோட்டத்தில் தாழம்பூ புதர்கள் நிறைந்திருக்கும். காற்று வீசும் பொழுது தோட்டம் முழுவதும் தாழம்பூ மணம் நிரம்பியிருக்கும்.
அந்த கிராமத்திற்கு நான்கு புறமும் பாதை இருந்தது.1965 வரை 5ம் வகுப்பு வரை ஆரம்ப பள்ளியும் ஒரு போஸ்டாபீசும் இருந்தது. கிராமத்தின் நடுவே மாரியம்மன் கோவில் அதை சுற்றி தெருக்கள் பெரிய ஆலமரம் அதன் எதிரே குளம்.
அதை தாண்டி ஒரு மளிகை கடை. அதன் கீழே சிறிய பள்ளி மைதானம் அளவு பாவுக்கு கஞ்சி போடும் பாவுடை.
நெசவு பாவை பெரிய கற்களில் கட்டி 5”அளவு துணி குழாயில் பதமான சூடான கஞ்சியை பாவின் இரு பக்கமும் பூசுவது தான் அது. இது இன்று சைசிங் மில்களில் செய்யப்படுகின்றது.
எல்லாமே100 நெம்பர் கைத்தறி சேவைகள்.100 குடும்பங்கள் சுமாராக 200 தறிகள். கைத்தறி சேவைகள்... வருடம் முழுவதும் குறிபிட்ட பண்டிகை நாள்களை தவிர தறியின் சத்தம் சீராக சடக் புடக் என்று கேட்டுக் கொண்டிருக்கும்.
நாக மாணிக்கத்தை பற்றி பின்ளாளில் நான் கேள்வி பட்டதையே அந்த கிராமத்தின் நடந்த சம்பவம் எனக்கு உணர்தியது.
கிராமத்தை சுற்றி பகல் நேரங்களிலும் அதுவும் மதிய நேரத்தில் ஒரு அனுமாஸ்யம் தெரியும்.
நாகமாணிக்கம் என்பது நாகம் கோபப்படாமல் நூறு வருடம் வாழ்ந்து அதன் விஷம் கெட்டி பட்டு மாதுளை மணிகளை விட சற்று பெரிதாக இருக்குமாம். இதன் பிரகாசம் இரவை கிழித்து ஒளிருமாம்.
கன்னியாகுமரி தாயின் மூக்குத்தியாக இருப்பது நாக மாணிக்கம் என்று ஒரு கதை சொல்வார்கள். பண்டைய காலத்தில் பரதவர்களின் கலங்கரை விளக்கே அன்னை குமரித்தாயின் மூக்குத்தியாக இருந்ததாம். அவ்வாறு கோபப்பாடாத பாம்பு ஞானமடைந்து பெறுவதுதான் நாக மாணிக்கம் என்பார்கள்.
நவ ரத்தினங்கள் 9 முத்து, வைரம், வைடூரியம், மரகதம், நீலம், புஷ்பராகம், கோமேதகம், பவளம், மாணிக்கம். இதில் நாக மாணிக்கம்தான் உயர்வான ரத்தினமாக கருதப்படுகின்றது…
இந்திய பாரம்பரிய குடும்பங்களிலும் இவைகள் கொட்டி கிடந்திருக்கின்றன. அது அவர்களின் அறியாமையாலும் தரித்தினத்தில் பீடிக்கப்பட்டு மிக குறைந்த பணத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும்.
உலகில் மத வாழ்வியல் முறை மதங்கள் உருவான இடம் இந்தியா.
ஒருநாள் காலை 6 மணிக்கு பால் வாங்க பள்ளந்தோட்டத்திற்கு சென்றேன். சாணத்தி ஆத்தாவின் வீட்டில் சிறிய கூட்டம் பக்கத்து தோட்டக்காரர்கள் திரண்டிருந்தனர். என்னை பார்த்த ஆத்தா அப்புனு என்று கூப்பிட்டு விட்டு கூட்டத்தாரிடம் ஏதோ மிக முக்கிய சம்பவத்தை விவரித்து கொண்டிருந்தார்.
நாகம் மாணிக்கங்கக்கினா என்ன செய்யோனுமுன்னு எங்க ஆத்தா சொல்லியிருக்கா.
பாம்பு நூறு வருசம் வெசங்கக்காமலிருந்தா தானே நாக மாணிக்கம் அதன் விஷப்பையில் திரளும். எங்கபரம்பரையிலே பல பேரு நாக மாணிக்கத்தை புடிச்சிருக்காங்க என்று எங்க ஆத்தா சொல்லிருக்காப்லே.
நான் நினைத்தேன் இன்னும் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டும். அம்மா சத்தம்போடுவா காலை நேர பில்டர் காப்பிக்காக என் குடும்பம் நான் வாங்கி செல்லும் பாலை எதிர்பார்த்திருக்கும். என்ன நடந்தது என்னும் விவரத்தை அம்மாவிடம் சொல்ல வேண்டும்.
எனக்கு ஆத்தா தரும் கருப்பட்டி காப்பி இன்று இருக்காது என்று நினைத்தேன்., ஆத்தா இன்னும் சொல்லிக்கொண்டிருந்தது.
நான் காலம்புற 3 மணிக்கு உபாதைக்கு வெளியே வந்தேன். தாழம் பூ பொதர்கிட்டே என்ன அப்படி ஒரு வெளிச்சம் அய்யோ இது வெளிச்சமா கோடி சூரிய பிரகாசத்தை நிலத்திலே வைச்ச மாதிரி. அய்யோ நாகம் மாணிக்கத்தை கக்கியிடுச்சா. எனக்கு கைகால் ஓடலே எங்காத்தா சொன்னது ஞாபகம் வந்தது. அப்படி நீ பாத்தா சாணி ஒருகூடையை அது மேலே போட்டுட்டு திரும்பிப் பாக்காமே ஒடியாந்துடு.
நான் சாணி கூடையை எடுத்துக் கொண்டு தாழம்பூ புதர் கிட்டே போறேன்… வெளிச்சம் என்மேலே கொட்டி கிடக்கு.,நான் கட்டியிருந்த பழைய சேலையெல்லாம் மின்னுது., என் வறண்ட தோலில் கூட யவனம் ஓடுது. போறேன் போறேன் போயிட்டே இருக்கிறேன்., என் நா கூட வரண்டுவிட்டது. காலமே நின்ற மாதிரி இருந்தது என்றாள் ஆத்தா.
அங்கே வட்டமான ஒளி பூமி பந்தை தொட்டது., தாழம்பூ புதரெல்லாம் இந்திரலோகத்தின் தோட்டம் போல இருந்தது தாழம்பூவின் மணம் மூச்சை முட்டியது.,
என்னால் சாணியை நாகமாணிக்கத்தின் மேல் போட முடியவில்லை ஒரு முழம் தள்ளிப்போட்டுட்டேன் ஒருமுழ தடித்த நாகம் மாணிக்கத்தை கவ்விக்கொண்டு பறந்து விட்டது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...