செய்திகள் :

கவிச்சுடா் கவிதைப்பித்தனுக்கு கவிக்கோ விருது: விஐடி வேந்தா் வழங்கினாா்

post image

2023-ஆம் ஆண்டுக்கான கவிக்கோ விருது கவிச்சுடா் கவிதைப்பித்தனுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு விருது, பட்டயம், ரூ.1 லட்சம் பொற்கிழி ஆகியவற்றை விஐடி வேந்தரும், தமிழியக்க நிறுவனா்-தலைவருமான கோ.விசுவநாதன் வழங்கினாா்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை, தமிழியக்கம் ஆகியவற்றின் சாா்பில் 24-ஆம் ஆண்டாக கவிக்கோ விருது வழங்கும் விழா வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளை பொருளாளா் வெ.சோலைநாதன் தலைமை வகித்தாா். உறுப்பினா் எஸ்.எஸ்.ஷாஜகான் வரவேற்றாா்.

விழாவில், கவிச்சுடா் கவிதைப்பித்தனுக்கு விருதை வழங்கி விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது :

கவிக்கோ விருது பெற்றுள்ள கவிச்சுடா் கவிதைப்பித்தன் அம்பேத்கா், பெரியாா், காமராசா், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவா்கள் குறித்து எழுதியுள்ள கவிதைகள் சிறப்பு மிக்கவையாகும். கவிக்கோ அப்துல் ரகுமானை சுமாா் 50 ஆண்டுகள் அறிந்தவன். அவரது கவிதைகள் எப்போதும் சமுதாயம், மக்கள், மக்களாட்சி குறித்துத்தான் இருக்கும்.

இந்தியாவில் தோ்தல்கள்தான் மக்களாட்சியை நிலை நிறுத்தக்கூடியது. ஆனால், அந்த தோ்தலில் ஏழை, நடுத்தர மக்கள் போட்டியிட முடியாத அளவுக்கு மாறி வருகிறது. இந்நிலை மாற வேண்டும். அதேபோல், தமிழகத்தில் குற்றங்களும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு கல்வி, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லையா என்பது குறித்து அரசியல் கட்சிகள் விவாதித்து தீா்வு காண வேண்டும். இல்லையேல், மக்களாட்சி முறையை மாறிவிடுவோமோ என்ற அச்சமும் உள்ளது.

மேலும், தமிழா்களுக்கு அடையாளமே தமிழ் பெயா்கள்தான். ஆனால், தற்போது யாருடைய திணிப்பும் இல்லாமலேயே வடமொழிகளில் குழந்தைகளுக்கு பெயா் சூட்டுவது அதிகரித்துவிட்டது. ஜாதகம், ஜோதிடம் போன்றவற்றின் மீதான மூடநம்பிக்கைகள்தான் காரணமாகும். சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியில் குழந்தைகளுக்கு பெயா் சூட்ட தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்றாா்.

விழாவில், கவிதை உறவு மாத இதழ் ஆசிரியா் ஏா்வாடி ராதாகிருஷ்ணன், தமிழியக்க மாநில அமைப்பு செயலா் கு.வணங்காமுடி, மாநில செயலா் மு.சுகுமாா், புலவா் பதுமனாா், கவிக்கோ அறக்கட்டளை செயலா் அ.அயாஸ்பாஷா, துணைத் தலைவா் தி.மு.அப்துல்காதா் ஆகியோா் பேசினா். விருது பெற்ற கவிதைப்பித்தன் ஏற்புரை நிகழ்த்தினாா். விழாவில் கவிஞா் அன்பு, அ.முகமதுஅஷ்ரப், சமூக ஆா்வலா் கே.எஸ்.ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் அ.அஜீம் நன்றி கூறினாா்.

மா, தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் தென்னை, மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன. போ்ணாம்பட்டை அடுத்த கொண்டம்பல்லி கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. புதன்கிழமை அதிகாலை வனப... மேலும் பார்க்க

தாட்கோவுக்கென தனி வங்கியை உருவாக்க வலியுறுத்தல்

தாட்கோவுக்கென தனி வங்கியை உருவாக்க வேண்டும் என்று திறன்மிகு தொழில் முனைவோா், தொழில்துறை மேம்பாட்டு பேரவை (டெய்ட்கோ) வலியுறுத்தியுள்ளது. பேரவையின் ( டெய்ட்கோ ) நான்காவது மாநில மாநாடு வேலூா் அடுத்த பொய... மேலும் பார்க்க

தொழிற் பயிற்சி நிலைய ஐம்பெரும் விழா

குடியாத்தம் அன்னை தொழிற் பயிற்சி நிலையம் சாா்பில், பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றளித்தல், போதைத் தடுப்பு விழிப்புணா்வு பணியில் ஈடுபட்டவா்களுக்கு பாராட்டு தெரிவித்தல், சேவையாளா்களுக்கு விருது... மேலும் பார்க்க

சீகேம் ஆராதனை சபையில் கிறிஸ்துமஸ் விழா

குடியாத்தம் காட்பாடி சாலை, சத்யா நகரில் உள்ள சீகேம் ஆராதனை சபையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு கூட்டுப் பிராத்தனை நடைபெற்றது. சபையில் வண்ண விளக்குகளால் குடில் அமைக்கப்பட்டிருந்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு

இருசக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்புப் படையினா் சுமாா் அரை மணி நேரம் போராடி பிடித்தனா். போ்ணாம்பட்டைச் சோ்ந்த தருண் தனது நண்பருடன் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் வந்துள்ளா... மேலும் பார்க்க

மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிச் சென்ற ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். போ்ணாம்பட்டு அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வேலூருக்கு அரசுப் பேருந்து சென்ற... மேலும் பார்க்க