கோயிலில் சிலிண்டர் வெடிப்பு! பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
ஹுப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் படுகாயமடைந்த ஐயப்ப பக்தர்களில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
கடந்த திங்களன்று (டிச.23) சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 9 பேரும் கர்நாடக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று (டிச.25) இரண்டு பேர் பலியானார்கள்.
இதையும் படிக்க: 49 ஆண்டுகள் கழித்து குடும்பத்தோடு இணைந்த பெண்!
இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த ஐயப்ப பக்தரான ராஜு மூகேரி (வயது-16) என்ற சிறுவன் இன்று (டிச.27) சிகிச்சை பலனின்றி பலியானார்.
இதனால், இந்த விபத்தில் பலியானோரது எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் அம்மாநில தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மேலும், சிகிச்சைப் பெற்று வரும் 6 ஐயப்ப பக்தர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.