அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
அரசுப் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொலை!
பிகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஹுசைனாபாத் கிராமத்தைச் சேர்ந்த பிண்ட்டு ரஜாக், குன்ஹேசா எனும் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இன்று (டிச.27) காலை அவர் வழக்கம்போல் பள்ளிக்கூடத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் பிண்ட்டு ரஜாக்கின் நெஞ்சிலும் வயிற்றிலும் துப்பாகியால் சுட்டுவிட்டு தப்பியோடினர்.
ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்த அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், பின்னர் அங்கிருந்து ஷேக்புரா அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டுள்ளார். ஆனால், அதற்குள் அதிகாமான ரத்தம் வெளியாகி அவர் பரிதாபமாக பலியானார்.
இதையும் படிக்க: பாலத்திலிருந்து கவிழ்ந்த பேருந்து! 8 பேர் பலி!
இதனைத் தொடர்ந்து அவரது உடலைக் கைப்பற்றிய பிகார் மாநில காவதுறையினர் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு (2023) பிண்ட்டு ரஜாக்கின் ஆபாச விடியோ ஒன்று கசிந்து, அவர் மீது கல்வி துறை நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தனர். இந்தச் சம்பவமே அவரது கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், கொலைக்கான காரணம் சரியாகத் தெரியவராததினால் தப்பியோடிய மூன்று குற்றவாளிகளையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.