புதுச்சேரியில் பாமக பொதுக் குழக் கூட்டம் : ராமதாஸ் பங்கேற்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ்,கெளரவத் தலைவர். ஜி.கே. மணி,வன்னியர் சங்கத் தலைவர் பு.தா அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள்பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க |விஜயகாந்த் நினைவு நாள்: அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி
பொதுக்குழு தொடக்கமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கட்சியின் வளர்ச்சி , எதிர்கால செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் ராமதாஸ் கருத்துக் கேட்டறிகிறார்.
பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.