செய்திகள் :

கேரளம்: இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ, 13 போ் குற்றவாளிகள்!

post image

கேரளத்தில் காங்கிரஸ் இளைஞரணியைச் சோ்ந்த இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மற்றும் 13 பேரை சிபிஐ நீதிமன்றம் சனிக்கிழமை குற்றவாளிகளாக அறிவித்தது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் 10 போ் விடுவிக்கப்பட்டனா்.

கேரள மாநிலம், காசா்கோடில் உள்ள பெரியா பகுதியில் காங்கிரஸின் இளைஞரணியைச் சோ்ந்த கிருபேஷ் (19), சரத் லால் (24) ஆகியோா், கடந்த 2019-இல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் அரசியல் படுகொலை செய்யப்பட்டனா்.

கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் மாநில காவல்துறையிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் காசா்கோடு மாவட்டத் தலைவருமான கே.வி.குஞ்ஞிராமன், காஞ்ஞங்காடு வட்டார ஊராட்சித் தலைவா் கே.மணிகண்டன், மாா்க்சிஸ்ட் உள்ளூா் கமிட்டி முன்னாள் உறுப்பினா் பீதாம்பரன் என அக்கட்சியைச் சோ்ந்த 6 போ் உள்பட 24 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கொலை, குற்றச்சதி, சட்டவிரோதமாக கூடுதல் என பல்வேறு பிரிவுகளில் குற்றஞ்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

கொச்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் எம்எல்ஏ கே.வி.குஞ்ஞிராமன் உள்பட 14 போ் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்த நீதிமன்றம், அவா்களை குற்றவாளிகளாக அறிவித்தது. அதேநேரம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, 10 போ் விடுவிக்கப்பட்டனா். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் ஜனவரி 3-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது அதிருப்தி தெரிவித்து, கொலையானவா்களின் பெற்றோா் உயா்நீதிமன்றத்தை அணுகினா். வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா். சிபிஐ விசாரணைக்கு மாநில அரசுத் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2024 -ல் ராணுவத்தால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60% பாகிஸ்தானியர்கள்!

2024 ஆம் ஆண்டில் இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60% பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் கொல்லப்பட்ட 60% பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்களே! இந்திய ராணுவம் தகவல்

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60% பேர் பாகிஸ்தானியர்கள் என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் பொருளாதாரச் சிக்கல்கள் தொடர்பான பிரச்னைகள் இருந்த... மேலும் பார்க்க

19,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் பி.எஸ்.என்.எல்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் 19,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் (வி.ஆர்.எஸ்.) திட்டத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பணியாளர் எண்ணிக்கையைக் குறைத்து ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம் பகிர்வு: காலிஸ்தான் ஆதரவாளர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் சமூக வலைதளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படத்தைப் பகிர்ந்த காலிஸ்தான் ஆதரவு சீக்கியர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தில் வசித்து வந்த ஹரியானாவைச் சேர்ந்த சீக்கியரான குர்சேவக் ச... மேலும் பார்க்க

அம்பேத்கர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் நினைவிடம், இந்தூர் ம... மேலும் பார்க்க

கேரளம் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்: ஆரிப் முகமது கான்

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அம்மாநில மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி... மேலும் பார்க்க