செய்திகள் :

சமூக வலைதளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம் பகிர்வு: காலிஸ்தான் ஆதரவாளர் கைது!

post image

உத்தரப் பிரதேசத்தில் சமூக வலைதளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படத்தைப் பகிர்ந்த காலிஸ்தான் ஆதரவு சீக்கியர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் வசித்து வந்த ஹரியானாவைச் சேர்ந்த சீக்கியரான குர்சேவக் சிங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு அதில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை இணைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த கோட்வாலி பகுதி காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கடந்த டிசம்பர் 23 அன்று உ.பி.யின் புரன்பூர் பகுதியில் பஞ்சாப் மற்றும் உ.பி. காவல்துறையினர் சேர்ந்து நடத்திய என்கவுன்டரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னர், காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில் குர்சேவக் சிங் இவ்வாறு பதிவிட்டது அவரது கைதுக்கு வழிவகுத்தது.

சமூக வலைதளங்களில் பரவும் இதுபோன்ற பதிவுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பிரிவினைவாத செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு புகார் அளிக்குமாறு உள்ளூர்வாசிகளை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

புத்தாண்டு: தாஜ்மஹாலில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

புத்தாண்டையொட்டி தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். கோயில்கள், சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் க... மேலும் பார்க்க

பாஜக தவறுகளை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? மோகன் பகவத்துக்கு கேஜரிவால் கேள்வி!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தில் தாய், 4 மகள்கள் கொலை! கொலையாளி யார்?

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில், விடுதி அறையில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 4 மகள்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.குடும்பத் தகராறில், தாய் மற்றும் 4 மகள்களைக் கொலை செய... மேலும் பார்க்க

மணிப்பூர் கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

மணிப்பூர் மாநிலத்தின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் இன்று (ஜன.1) அதிகாலை கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.காங்போக்வி மாவட்டத்தின் மலைகளில் பதுங்கியிருந்த கிளர்ச்சியளர்கள், அதற்கு கீழுள்ள மேற்க... மேலும் பார்க்க

மூன்று வகை வங்கிக் கணக்குகள் இன்றுமுதல் மூடல்!

செயல்பாட்டில் இல்லாத மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூடுவதற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான ... மேலும் பார்க்க

“புத்தாண்டு மகிழ்ச்சியை தரட்டும்” -பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து!

உலகின் பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் 2025ஆம் ஆண்டு பிறந்தது.நாடு முழுவதிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் தங்க... மேலும் பார்க்க