Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
Book Fair: வாசகர்கள் மழையில் விகடன் ஸ்டால்கள்; விற்பனையில் முந்தும் டாப் 3 விகடன் வெளியீடுகள் எவை?
சென்னை நந்தனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 48 வது புத்தகக் கண்காட்சியில், விகடன் பிரசுரம் F 5 மற்றும் F 45 ஸ்டால்களில் கடை அமைத்துள்ளது. வழக்கம் போலவே இந்த ஆண்டும் நமது விகடன் பிரசுரத்தின் ஸ்டால்களில் வாசகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த புத்தகக் கண்காட்சிக்கென்றே காத்திருக்கும் வாசகர்கள் பெருமளவில் வந்து தங்கள் விரும்பும் புத்தகங்களை அள்ளிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.
விகடன் ஸ்டால்களில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் புதுப்பொலிவுடன் வாசகர்களின் வசதிக்காகவும் தேர்வுக்காகவும் வைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை விகடன் ஸ்டால்களில் வாசகர்கள் அள்ளிச் செல்லும் புத்தகங்களில் முதல் மூன்று இடங்களில் அண்மையில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகம் விற்பனையில் முதல் இடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் மதனின் கி.மு - கி.பி புத்தகமும், மூன்றாம் இடத்தில் மருத்துவர் ஜி. ராமானுஜம் எழுதிய 'மனசுக்குள் ஒரு ஜிம்' புத்தகமும் பெரும்பாலோனோர் விரும்பி வாங்கிச் செல்லும் புத்தகமாக உள்ளது .
இவை இல்லாமல், விகடன் பிரசுரத்தின் புதிய வெளியீடுகளான ரங்க ராஜ்ஜியம், மாஞ்சோலை, ரத்த சரித்திரம், உனக்குள் ஒரு ரகசியம், வேட்டை நாய்கள், கோயில் யானையின் சிறுவன் போன்ற புத்தகங்களும் பெருமளவில் வாசகர்கள் விரும்பி வாங்கி செல்வதைக் காண முடிகிறது .
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...