திமுகவினா் உற்சாகமாக தோ்தல் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி வேண்டுகோள்
கேம் சேஞ்சர் டிரைலர் தேதி!
கேம் சேஞ்சர் படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: ’முதுகுல குத்திட்டீங்களே..’ புலம்பும் அஜித் ரசிகர்கள்!
தற்போது, படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (2.1.25) மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.