செய்திகள் :

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `சிறையில் இருந்து தப்பித்தல்...’| அத்தியாயம் 18

post image
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...

ஒருபக்கம் தமிழரசன் கைதாகிவிட, புலவரையும் வளைத்துப் பிடித்திருந்தது போலீஸ். திருச்சி சிறையில்தான் அவரும் அடைக்கப்பட்டிருந்தார். கொஞ்ச நாளிலேயே சிறையில் புலவர் கலியபெருமாள் இருந்த பகுதிக்கு தமிழரசனையும் மாற்றினார்கள். இவர்கள் இருவரோடு சேர்த்து மொத்தம் ஏழு பேர் அங்கு இருந்தார்கள். தமிழரசன் இங்கு போனதுமே தப்பிக்கத் திட்டம் போட்டார். சிறையின் உயர்ந்த வெளிமதில் மீது, கம்பி முள்வேலி போடப்பட்டிருந்தது.


ஒரு நீளமான கயிறைப் பிடித்து ஏற வசதியாக முடிச்சுகள் போட்டுத் தயாரித்து, அதன் முனையில் கொக்கியைப் பிணைத்து, அதைத் தூக்கி வீசி இந்தக் கம்பி வேலியில் மாட்டுவது.... முதல் ஆள் இன்னொரு கயிறோடு ஏறி, அதையும் இந்தக் கொக்கியோடு இணைத்து வெளிப்புறமும் தொங்கவிட்டு, அதன் வழியாக இறங்கி தப்பிப்பது... அதன் பின் அடுத்தடுத்த ஆட்கள் இதேபோல் கயிறைப் பிடித்து ஏறித் தப்பிப்பது என்று முடிவானது.

சிறை மதில் சுவரின் எல்லா இடங்களையும் பார்த்து, மதிலேற வசதியான இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். சிறைக்குள் வேலை செய்யப் போகிறவர்கள், பழைய பெட்ஷீட் துணிகளை எடுத்து வந்தார்கள். அதிலிருந்து நூலைப்பிரித்துச் சின்னச் சின்ன துண்டுகளாய் கயிறு செய்து, தங்கள் செல்களில் மறைத்து வைத்தார்கள்.

தச்சு வேலை செய்யும் பிரிவில் சொல்லிவைத்து, எங்கிருந்தோ பழைய இரும்புக் கொக்கி ஒன்றையும் பிடித்து விட்டார்கள். தேவைப்படும்போது எல்லாவற்றையும் பிணைப்பது சில நிமிட வேலைதான்! தப்பிக்கும்போது சிறைக்காவலர்கள் சுற்றி வளைத்து விட்டால்? ' முன்னெச்சரிக்கையாய் நாட்டு வெடிகுண்டுகள் செய்து வைத்துக் கொள்ளலாம் ' என்று யோசனை சொன்னார் தர்மபுரி தோழர் ஒருவர். பீடி பிடிக்கும் பழக்கம் உள்ள கைதிகளிடமிருந்து தீப்பெட்டிகளை இரவல் வாங்கி வந்தார்கள். தீக்குச்சியின் நுனியில் இருக்கும் மருந்தை மட்டும் சுரண்டி சேகரித்தார்கள்.

இப்படித் தீப்பெட்டிகளில் கிடைத்த மருந்தை மணல்கலந்து உருட்டினால், வெடிகுண்டு தயாராகிவிடும். வேகமாய் தரையில் போட்டால் அது வெடிக்கும்... புழுதிக் கிளப்பும்... அருகில் இருப்பவர்களுக்குப் பயம் கிளம்பும். லேசாய் காயமும் படும். மருந்தை எடுத்துக்கொண்டு, காலி பெட்டிகளையும் குச்சிகளையும் யாரும் பார்க்காதவண்ணம் சிறை அடுப்பில் கொண்டு போய் உஷாராய் எரித்தார்கள்... எல்லாவற்றையும் ரெடி செய்து கொண்டு ஒரு ' நல்ல ' இரவுக்காக காத்திருந்தார்கள்!

அப்படி ஒரு இரவு வந்தது. ஏழு பேரும் வெளியேறினார்கள்... திட்டம் போட்டபடி கயிறு போட்டு ஏறினார்கள். கயிறு அவ்வளவு திடமாக இல்லை. கடைசி ஆள் ஏறும்போது அறுந்து விழுந்தது. தட்டுத்தடுமாறி அவரும் ஏறி அந்தப் பக்கம் போனார்.

வெளிப்பக்கக் கயிறும் அறுந்தது. உச்சியில் இருந்த கொக்கிக் கழன்று உட்புறம் விழுந்தது. சத்தம் சிறை முழுக்க எதிரொலிக்க, காவலர்கள் உஷாராகி ஓடிவந்தனர். கயிறும், கொக்கியும் கண்களில் பட்டன. அபாய சங்கு ஒலித்தது. தப்பிய ஏழு பேருக்கும், பின்னால் காவலர்கள் துரத்தி வரும் சத்தம் துல்லியமாய் கேட்டது..... சிறைக் காவலர்கள் விழிப்பாகி தங்களைத் துரத்துவார்கள என்பது அவர்கள் எதிர்பார்த்ததுதான்... ஆனால், இவ்வளவு விரைவாகத் துரத்தல் நிகழும் என்பதுதான் அவர்கள் எதிர்பாராதது!

விடுதலையைத் தேடி இவர்கள் ஓட... வெறியோடு துரத்தினார்கள் சிறைக் காவலர்கள். இரண்டு கும்பல்களுக்கும் இடையிலான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே வந்தது! " இனிமேலும் தாமதிக்கறதுல அர்த்தமில்லை... ஒரு குண்டைத் தூக்கியெறி!. அவங்க குழம்பி நின்னுடுவாங்க. நாம தப்பிச்சிடலாம். "

ஒரு துண்டில் வெடிகுண்டுகளைப் போட்டு சுருட்டி கையில் வைத்துக்கொண்டு கூடவே ஓடிவந்த சக கைதிக்குக் கட்டளையிட்டார் தமிழரசன். அவர் தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு சடாரென திரும்பிப் பின்னால் ஓடிவந்த காவலர்கள் மீது வேகமாய் ஒரு குண்டை வீசினார். அந்தக் கும்மிருட்டில் குண்டு விழுந்து வெடித்த இடத்தில் பெரும் தீப்பொறிக் கிளம்பியது. காதைப் பிளக்கும் வேட்டுச்சத்தம்..... வெடித்துச் சிதறிய வேகத்தில் கிளம்பிய புழுதி, முன்வரிசையில் ஓடிவந்த காவலர்கள் முகத்தில் அறைந்தது! வேதனையோடு அவர்கள் கீழே விழுந்து புரண்டனர். மற்ற காவலர்கள் திகைத்து நின்று விட்டனர்.


சிறையிலிருந்து சில நிமிடங்களுக்கு முன் தப்பிய கைதிகளின் கையில் வெடிகுண்டு எப்படி முளைத்தது! அவர்கள் கையில் இருந்தது ஒரு குண்டுதானா? அல்லது இன்னும் நிறையவா? இப்படிக் கேள்விகள் எழுந்தாலும் பயந்து நிற்கவில்லை அவர்கள். கொஞ்சம் இடைவெளிவிட்டு அந்தக் கைதிகளைத் துரத்ததான் செய்தனர். வயதானவர் என்பதால், புலவர் கலியபெருமாளை முன்னால் ஓடவிட்டு அவருக்கு இணையான வேகத்தில்தான் மற்றவர்கள் ஓடினார்கள். தாங்கள் வீசிய குண்டுக்கு சிறைக்காவலர்கள் பயந்து விட்டார்கள் என்ற நினைப்பே அவர்களைப் பெருமிதம் கொள்ளவைத்தது! கண்மண் தெரியாமல் ஓடியதில் ஏதோ கல் தடுக்கித் தடுமாறி கீழே விழுந்துவிட்டார் புலவர். ' குபுக்கென்று ரத்தம் பீறிட்டுவர, காலைப் பிடித்துக் கொண்டு அலறினார் அவர். எல்லாக் கைதிகளும் அவரைச் சுற்றித் தயங்கி நின்றனர். காவலர்கள் இப்போது நெருங்கி விட்டனர்.

நொடிகூட தாமதிக்கவில்லை தமிழரசன். குண்டுகள் வைத்திருந்த சக கைதியின் தோளைத் தட்டினார். அவர் ' சிக்னலை'ப் புரிந்துகொண்டு அடுத்த குண்டை வீசியெறிந்தார். அதே சமயம், " கொஞ்ச நேரம் வலியைப் பொறுத்துக்குங்க தோழர்! முதல்ல தப்பிச்சாகணும்... அதன் பிறகு காயத்துக்குக் கட்டு போடறதைப் பற்றி யோசிக்கலாம் " என்று புலவரை சமாதானப்படுத்தியபடி, அவரைத் தூக்கி தன் தோளில் சுமந்தபடி விட்ட இடத்திலிருந்து ஓட்டத்தைத் தொடர்ந்தார் தமிழரசன். மற்ற எல்லோரும் அவர் பின்னால் ஓடினார்கள்!

இப்போது சிறைக் காவலர்களுக்கு நம்பிக்கை ஒளி தெரிந்தது.... அடிபட்டவரைத் தோளில் தூக்கியபடி நொண்டிக்குதிரை போல் ஓடுகிறார்கள். இவர்களை நன்றாய் ஓடவிட்டு, போக்குக்காட்டி அதன் பிறகு மடக்கி விடலாம் என்ற நம்பிக்கையோடு துரத்தினார்கள். ஏதோ கண்ணாமூச்சி ஆட்டம் போல் இருந்தது அந்த ஓட்டம். சிறைக் காவலர்கள் திடீரென இந்தக் கைதிகளை நெருங்குவது போல் போக்குக் காட்டுவார்கள். உடனே கைதிகள் வெடிகுண்டை வீசியெறிவார்கள்.


காற்றில் ' உய்ங்'கென்று ஒலியெழுப்பியபடி அந்தக் குண்டு பறந்து வருவது தெரிந்ததுமே, காவலர்கள் ' சட்'டென்று நின்று விடுவார்கள். இப்படியே ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வந்து விட்டார்கள். வழக்கம் போல் போக்குக்காட்ட சிறைக் காவலர்கள் இவர்களை நெருங்க, பூட்ஸ் ஓசைகள் கேட்ட தமிழரசன், " தோழர், உடனே குண்டை எடுத்து வீசுங்க! ” என்று கட்டளையிட்டார்.


வெடிகுண்டுகளை சுமந்துவந்த சக கைதி தயக்கத்துடன், " தோழர்! கைவசம் இருந்த குண்டெல்லாம் தீர்ந்து போச்சு! " என்றார். கொஞ்சம் சத்தமாகவே எழுந்த இந்தக் குரல் சிறைக் காவலர்கள் காதில் தேனாய்ப் பாய்ந்தது. அவர்கள் புது உத்வேகம் பெற்றுத் துரத்த ஆரம்பித்தார்கள்.


மேலும் சலசலக்கும்...!

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `ஆயுதம் ஏந்திப் போரிடும் ராணுவத்தையே...' | அத்தியாயம் 20

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : தமிழரசனும் தனித்தமிழ்நாடு கோரிக்கையும் | அத்தியாயம் 19

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : புலவர் மீதான தமிழரசனின் பக்தியும் கைதும்| அத்தியாயம் 17

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : தமிழரசனும் புலவர் கலியபெருமாளும்... | அத்தியாயம் 16

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `அறுவடை இயக்கம்... அழித்தொழித்தல்... தமிழரசன்| அத்தியாயம் 15

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `தமிழரசன் பாணி மட்டும் முற்றிலும் வேறு’ | அத்தியாயம் 14

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க