கேரளம் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்: ஆரிப் முகமது கான்
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அம்மாநில மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எனது பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால் கேரளத்திற்கு இப்போதும் என் இதயத்திலும், என் உணர்வுகளிலும் மிக மிக மிக சிறப்பான இடம் உள்ளது. கேரளத்துடனான எனது தொடர்பு முடிவுக்கு வரப்போவதில்லை.
இது ஒரு வாழ்நாள் பந்தம், நான் உங்களுடன் தொடர்பில் இருக்க முயற்சிப்பேன், கேரள மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது பதவிக்காலத்தில் தனக்குக் கிடைத்த அன்பு மற்றும் ஆதரவிற்காக தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
பிகார்: தலித் பிரிவினரை கோயில் பூசாரிகளாக்கி பிரதிநிதித்துவம் அளித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி காலமானார்!
வேறு எந்த பிரச்னையும் இல்லை. கேரள அரசுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர்கள் மக்கள் நலனுக்காக பாடுபடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார். கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கானை, பிகாா் ஆளுநராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அண்மையில் நியமித்தார்.
பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கும் மாநில அரசுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்போக்கு நீடித்துவந்தநிலையில், அவா் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பிகாா் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஆளுநர்கள் அந்தந்த அலுவலகங்களில் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து இந்த நியமனங்கள் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.