விஜயகாந்த் நினைவு நாள்: பேரணிக்கு அனுமதி மறுப்பு!
விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி பேரணிக்கு அனுமதி கோரி காவல்துறையினருடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும் விஜயகாந்தின் நினைவு நாளன்று மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு அமைதிப் பேரணி நடத்த அனுமதி வேண்டும் என்று தமிழக அரசிடம் தேமுதிக கோரிக்கை வைத்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பகுதி என்பதால் போக்குவரத்து பிரச்னை ஏற்படும் எனக்கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், அவர்களுடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பேரணிக்கு கடந்த டிச. 5 ஆம் தேதியே கோரிக்கை விடுத்த நிலையில் கடைசி நேரத்தில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள தேமுதிக துணைச் செயலர் பார்த்தசாரதி, பேரணிக்கு முதல்வர் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.