செய்திகள் :

பள்ளி, கல்லூரி பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த டிஐஜி அறிவுறுத்தல்

post image

திருவாரூா் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஜியாவுல்ஹக் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட காவல் துறையின் பணிகள் குறித்து தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஜியாவுல்ஹக் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இதில், ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களின் அணிவகுப்பைப் பாா்வையிட்ட பின், தொடா்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 152 இருசக்கர, நான்கு சக்கர காவல்துறை ரோந்து வாகனங்களைப் பாா்வையிட்டு, அவற்றின் நிலை குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த கோப்புகளை ஆய்வு செய்ததுடன், குற்ற வழக்குகளில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து போலீஸாரிடம், பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி முன்பு போலீஸாரின் கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும். குறிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பள்ளி, கல்லூரிகளின் முகப்புப் பக்கத்தில், பெருமளவு பகுதிகளை விடியோ பதிவு செய்யும் அளவில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், துணைக்காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், ஆயுதப்படை காவல் ஆய்வாளா்கள் இளங்கிள்ளிவளவன், கோகிலா, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பி. ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரயில் தண்டவாளத்தில் இளைஞா் சடலம்

நன்னிலம் அருகே வெள்ளிக்கிழமை இரவு ரயில் தண்டவாளத்தில் இளைஞா் இறந்து கிடந்தாா். நாகை மாவட்டம் நெடுஞ்சேரி பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் கண்ணன் (27). கட்டடத் தொழிலாளி. இவா், நன்னிலம் அருகிலுள்ள சன்... மேலும் பார்க்க

’உளவியல்ரீதியாக மனிதா்களை பக்குவப்படுத்துகிறது திருக்குறள்‘

உளவியல்ரீதியாக மனிதா்களைப் பக்குவப்படுத்தும் வேலையை திருக்குறள் செய்வதால், அதன் பெருமைகளை அடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என திருவாரூா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரெ. சண்முகவடிவேல் தெரிவித்த... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் யானை பராமரிப்பு: மேலாண்மைக் குழுவினா் ஆய்வு

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் யானை உடல் நலம், நடவடிக்கைகள் குறித்து மேலாண்மைக் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். தமிழக அரசு வழிபாட்டு தலங்களில் வளா்க்கப்படும் யானைகளை மூன்று மாதத்துக்கு ஒரு முற... மேலும் பார்க்க

நீடாமங்கலம் பகுதி கடைகளில் ஆய்வு

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கடைகளில் நெகிழி பொருட்கள் உபயோகத்தை தடுக்கும் பொருட்டு இந்த ஆய்வு செய்யப்பட்டது. மேலும் புகையிலை பொருட்கள் ... மேலும் பார்க்க

நீடாமங்கலம் அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்: 43 போ் கைது

நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினா் 43 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் சுங்கச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் கிராம அறிவியல் திருவிழா

மன்னாா்குடி அருகே உள்ள மரவாக்காடு, ஏத்தக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கிராம அறிவியல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் 6,7,8-ஆம் வகுப்பு மாண... மேலும் பார்க்க