குஜராத்: ரசாயன ஆலையில் நச்சு வாயுவை சுவாசித்த 4 தொழிலாளர்கள் பலி
குஜராத்தில் ரசாயன ஆலையில் நச்சு வாயுவை சுவாசித்த 4 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள தஹேஜ் என்ற இடத்தில் உள்ள ரசாயன ஆலையின் உற்பத்தி பிரிவில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் குழாயிலிருந்து கசிந்த நச்சுப் புகையை சுவாசித்த 4 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.
உடனே அனைத்து தொழிலாளர்களும் பருச்சில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மூன்று பேர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பலியாகினர். மற்றொருவர் காலை 6 மணிக்கு பலியானார்.
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸி. ஆதிக்கம்! இந்தியா 369 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இதுகுறித்து தஹேஜ் காவல் நிலைய ஆய்வாளர் பிஎம் படிதார் கூறுகையில், ஆலையின் தரைத்தளத்தின் வழியாக செல்லும் குழாயில் இருந்து எரிவாயு கசிவு காரணமாக நான்கு தொழிலாளர்கள் மயங்கி விழுந்தபோது இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் நான்கு பேரும் பலியாகினர் என்றார்.
சடலங்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.