திண்டுக்கல் நகைக் கடை உரிமையாளா்கள் வீடு, கடைகளில் வருமான வரித் துறையினா் சோதனை
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி: 9-ஆவது நாளாக மீட்புப் பணிகள் நீடிப்பு
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை மீட்கும் 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நீடித்தது.
கடந்த டிச.23-ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள கோட்புத்லி-பெரோா் மாவட்டத்தில் தனது தந்தையின் விளைநிலத்தில் சேத்னா என்ற சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது அங்கிருந்த 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிறுமி தவறி விழுந்தாள். தகவலின் அடிப்படையில் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படைகள் நிகழ்விடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபடத் தொடங்கின.
ஆரம்பத்தில் கயிற்றால் கட்டப்பட்ட இரும்பு வளையத்தைப் பயன்படுத்தி சிறுமியை மீட்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
சிறுமியை மீட்கும் பணிகள் 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நீடித்த நிலையில், நிலத்தில் உள்ள கடினமான பாறைகள் காரணமாக அவற்றைத் துளையிட்டு அவரை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது.
சிறுமிக்கு உணவு மற்றும் குடிநீரை மீட்புப் படையினரால் வழங்க முடியவில்லை. இதனால் அவரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு மங்கியுள்ளது.