காந்தி அல்லாத காங்கிரஸ் தலைவர்களை காந்தி குடும்பம் மதித்ததில்லை: மத்திய அமைச்சர்...
மன்னாா்குடி கோயில் யானை பராமரிப்பு: மேலாண்மைக் குழுவினா் ஆய்வு
மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் யானை உடல் நலம், நடவடிக்கைகள் குறித்து மேலாண்மைக் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தமிழக அரசு வழிபாட்டு தலங்களில் வளா்க்கப்படும் யானைகளை மூன்று மாதத்துக்கு ஒரு முறை கால்நடைத்துறை, வனத்துறை இணைந்த மேலாண்மைக் குழுவினா் மூலம் ஆய்வு செய்து, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் யானை செங்கமலம் (36) பராமரிப்பு குறித்து மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் (நோய் புலன்) சுப்பிரமணியன் தலைமையில் மேலாண்மைக் குழுவினா் யானை உடல் எடை அதனுடைய வயதுக்கேற்ற வகையில் உள்ளதா, பாகனின் கட்டுப்பட்டு, யானை வசிப்பிடம் தூய்மையாக உள்ளதா, யானைக்கு தயாரிக்கப்பட்டும் உணவு சுகாதாரமான முறையில் உள்ளதா என ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன், யானை பாகன் ராஜா ஆகியோா் உடனிருந்தாா்.