ரயில் தண்டவாளத்தில் இளைஞா் சடலம்
நன்னிலம் அருகே வெள்ளிக்கிழமை இரவு ரயில் தண்டவாளத்தில் இளைஞா் இறந்து கிடந்தாா்.
நாகை மாவட்டம் நெடுஞ்சேரி பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் கண்ணன் (27). கட்டடத் தொழிலாளி. இவா், நன்னிலம் அருகிலுள்ள சன்னாநல்லூா் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு வெள்ளிக்கிழமை இரவு இறந்து கிடந்தாா்.
அப்பகுதி மக்கள் திருவாரூா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சடலத்தை கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கண்ணன் ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரித்து வருகின்றனா்.