செய்திகள் :

சினிமாவிலிருந்து விலகும் கீர்த்தி சுரேஷ்?

post image

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவிலிருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், மகேஷ் பாபு, வருண் தவான் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பேபி ஜான் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதையும் படிக்க: ராம் சரணுக்கு 256 அடி கட் - அவுட்!

சில நாள்களுக்கு முன் தன் காதலர் ஆண்டனியை கோவாவில் திருமண செய்துகொண்ட கீர்த்தி, பேபி ஜான் புரமோஷன் நிகழ்வுகளில் தாலியுடன் கலந்துகொண்டு வைரலானார்.

இந்த நிலையில், திருமண வாழ்விற்கு நேரம் ஒதுக்க திட்டமிட்டுள்ள கீர்த்தி சுரேஷ் சினிமாவிலிருந்து விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்ததாக, இவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி ஆகிய திரைப்படம் வெளியாகவுள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்!

மான்செஸ்டா் யுனைடெட், செல்சி தோல்வி

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் பிரதான அணிகளான மான்செஸ்டா் யுனைடெட், செஸ்சி ஆகியவை செவ்வாய்க்கிழமை தங்கள் ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்தன. இதில் மான்செஸ்டா் யுனைடெட் 0-2 கோல் கணக்கில... மேலும் பார்க்க

புத்தாண்டு கொண்டாட்டம் 2025 - புகைப்படங்கள்

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இளம் பெண்கள் முகத்தில் வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர்.மொராதாபாத்தில் கொண்டாடி மகிழ்ந்த மாணவர்கள்.புத்தாண்டு கொண்டாட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள்.பிரயாக்ராஜில் புத்தாண்டை வரவ... மேலும் பார்க்க

அனிருத் குரலில் டிராகன் படத்தின் முதல் பாடல்!

இயக்குநராக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் முத்திரைப் பதித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அடுத்ததாக நடித்து வரும் ’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார். ’டிராகன்’ திரைப்படத்தில் இய... மேலும் பார்க்க

விடுதலை 2: வெற்றி விழா விடியோ வெளியிட்ட படக்குழு!

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படத்தின் வெற்றி விழா விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் டிச. 20 அன்று திரையரங்குகளில் வ... மேலும் பார்க்க

இட்லி கடை: முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் தேதி!

இட்லி கடை படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை மாலை வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல... மேலும் பார்க்க