அனிருத் குரலில் டிராகன் படத்தின் முதல் பாடல்!
இயக்குநராக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் முத்திரைப் பதித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அடுத்ததாக நடித்து வரும் ’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்.
’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின் கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் டிராகன் திரைப்படத்தில் ‘மயில்வாகனன்’ என்ற கதாபாத்திரமேற்று நடிக்கிறார் மிஷ்கின்.
தமிழ் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்துள்ள அஷ்வத் மாரிமுத்து இயக்கி வரும் டிராகன் திரைப்படத்தில் மிஷ்கின் மட்டுமல்லாது இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரும் கைகோர்த்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் ‘வாலே குமார்’ என்ற கதாபாத்திராத்திலும், கே. எஸ். ரவிக்குமார் ‘பரசுராம்’ என்ற கதாபாத்திராத்திலும் நடிக்கின்றனர்.
டிராகன் திரைப்படத்தின் மூலம் இளம் நாயகி ‘கயாது லோஹார்’ தமிழில் முதல்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் முதல் பாடலின் புரோமை நாளை வெளியாகிறது. அனிருத் குரலில் பாடல் வெளியாகவிருக்கிறது.
விக்னேஷ் சிவன் எழுத்தில் லியோன் ஜேம்ஸ் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.