இட்லி கடை: முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் தேதி!
இட்லி கடை படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை மாலை வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல் ரசிகர்களிடம் வைரலானது.
இதற்கிடையே, தனுஷ் இயக்கும் 4-வது படத்தின் அறிவிப்பு வெளியானது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இட்லி கடை எனும் படத்தினை நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கிறார்.
படம் அடுத்தாண்டு ஏப்.10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது
தனுஷின் வண்டர்பார் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தினை தயாரித்துள்ளது. ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள் அருண் விஜய், நித்யா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள்.
திருச்சிற்றம்பலம் படத்துக்குப் பிறகு தனுஷுடன் நித்யா மெனன் இணைவதால் இந்தப் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.