செய்திகள் :

டூரிஸ்ட் ஃபேமிலி படப்பிடிப்பு நிறைவு!

post image

நடிகர் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி, கருடன், நந்தன் என சசிக்குமார் நடிப்பில் சமீபத்தில் தொடர்ச்சியாக வெளியான திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இந்த நிலையில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் தற்போது நடித்துள்ளார்.

இதையும் படிக்க : 12 ஆண்டுகளுக்குப் பிறகு... மதகஜராஜா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கும் நிலையில், குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், சசிகுமார்-சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, சசிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் வருகின்ற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகும் படங்கள்?

பொங்கல் வெளியீட்டாக அறிவிக்கப்பட்ட சில படங்கள் வெளியீட்டுத் தேதியை மாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிய... மேலும் பார்க்க

நிவின் பாலி - நயன்தாரா படத்தின் வெளியீடு எப்போது?

டியர் ஸ்டூடன்ஸ் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் நிவின் பாலி தயாரித்து நடிக்கும் திரைப்படம் டியர் ஸ்டூடன்ஸ். இப்படத்தை ஜார்ஜ் பிலீப் ராய் மற்றும் சந்தீப் குமார் இணைந்து இய... மேலும் பார்க்க

ஷங்கர் படத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தேன்: பவன் கல்யாண்

இயக்குநர் ஷங்கர் திரைப்படங்கள் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியுள்ளார்.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 ஆம்... மேலும் பார்க்க

பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

பார்டர் - கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் கோப்பையை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது. இதனால் இந்தியா தனது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொட... மேலும் பார்க்க

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 05.01.2025மேஷம்:இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்க... மேலும் பார்க்க

பிரிஸ்பேன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் சபலென்கா-குடா்மெட்டோவா

பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு உலகின் நம்பா் 1 வீராங்கனை அா்யனா சபலென்கா தகுதி பெற்றுள்ளாா். இறுதியில் ரஷியாவின் குடா்மெட்டோவுடன் மோதுகிறாா். ஆஸ்திரேலியாவின... மேலும் பார்க்க