செய்திகள் :

இந்த வாரம் உங்களுக்கு எப்படி?

post image

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜனவரி 3 - 9) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் இணக்கமான சூழல் நிலவும். சிந்தித்துப் பேசுவீர்கள். உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகள் புதிய முறைகளில் வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும்.

அரசியல்வாதிகள் அரசு அலுவலர்களின்ஆதரவைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள்.

பெண்கள் கணவரின் பாராட்டுகளால் மகிழ்வீர்கள். மாணவர்கள் உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். உடனிருப்போர் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். அரசு சலுகைகள் கிடைக்கும். போட்டி, பொறாமைகள் கட்டுக்குள் இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுக்கான அறிகுறி தென்படும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். விவசாயிகளுக்கு நீர்வரத்து மிகும்.

அரசியல்வாதிகளுக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

பெண்கள் குடும்ப ஒற்றுமையைக் காண்பீர்கள். மாணவர்கள் விரும்பிய மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சிறிய முயற்சிகளில் வெற்றியை அடைவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பொருளாதாரம் மேன்மை அடையும். குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் தகுந்த ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளை யோசித்துச் செயல்படுவீர்கள். விவசாயிகள் பயிர் உற்பத்தி சாதகமாக அமையும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் அங்கீகாரம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட பணிகளைச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கலில் சிரமம் ஏற்படும். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். கலைத் துறையினர் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள்.

பெண்கள் விருந்து, விழாக்களில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் விரும்பிய மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜனவரி 3, 4, 5.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். நினைத்த காரியங்கள் நடந்தேறும். உடன்பிறந்தோரும் உதவி செய்வார்கள். நண்பர்களுடன் இணக்கமாகப் பணிபுரிவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடும் வியாபாரிகள் புதிய முயற்சிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். கலைத் துறையினர் குறை சொல்பவர்களை ஒதுக்குவீர்கள்.

பெண்கள் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். மாணவர்கள் முயற்சிகளை வேகப்படுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜனவரி 6, 7.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும். இழுபறியான பிரச்னைகள் தீரும். தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். தன்னம்பிக்கை வளரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் கூடுதல் வருவாயைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினருக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு பெற்றோரின் ஆதரவு உண்டு. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜனவரி 8, 9.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

உடல் ஆரோக்கியம் சிறக்கும். யோகா கற்பீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்துக்குச் சிந்திப்பீர்கள். வருமானம் படிப்படியாக உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிம்மதியான சூழல் நிலவும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. விவசாயிகளுக்கு பழைய குத்தகை பாக்கி வசூலாகும்.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். கலைத் துறையினருக்கு பணவரவு அதிகரிக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்கள் பிறரிடம் பேசும்போது, கவனமாக இருக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரம் ஏற்றமாகவே இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பேச்சினால் பிறரை கவர்வீர்கள். ரகசியங்களைப் பிறரிடம் பகிர வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரிகள் செலவழிக்கும்போது கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைத் தேடிப் பெறுவீர்கள்.

பெண்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்வீர்கள். மாணவர்கள் பிறரை அனுசரித்து நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

புத்திசாலித்தனம் கூடும். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவுவீர்கள். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பீர்கள். ஆன்மிகப் பலம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் அமையும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகளிடம் மேலிடம் கருணையுடன் நடக்கும். கலைத் துறையினருக்கு ரசிகர்களின் அன்பு மேலோங்கும்.

பெண்களுக்கு கணவரின்அன்பு மிகும். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கடினமான வேலைகளையும் செய்வீர்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பயணங்கள் நன்மையை அளிக்கும். வியாபாரிகள் கடின உழைப்பால் லாபம் அடைவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் மிகும்.

அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்து கூடும். கலைத் துறையினர் பிறருக்கு உதவுவீர்கள். பெண்களின் பொருளாதார நிலை சிறக்கும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். கடமையில் கண்ணும் கருத்துமாய் இருப்பீர்கள். கடன்கள் வசூலாகும். நல்லவர்கள் நண்பர்களாவர்.

உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் சுமுகமாகப் பழகுவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புச் செலவு கூடும்.

அரசியல்வாதிகள் இடமறிந்து கவனமாகப் பேசவும். கலைத் துறையினருக்கு உதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு கணவர் குடும்பத்தினரிடம் ஒற்றுமை ஓங்கும். மாணவர்கள் புதுத் தெம்புடன் கவனமாகப் பாடங்களைப் படிக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெறும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். புகழும் செல்வாக்கும் உயரும். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலை

களை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளால் சிறிது பாதிப்பு இருக்கும்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் சிறப்பாக ஈடுபடுவீர்கள். கலைத் துறையினரின் படைப்பாற்றல் அதிகரிக்கும்.

பெண்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்வீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகும் படங்கள்?

பொங்கல் வெளியீட்டாக அறிவிக்கப்பட்ட சில படங்கள் வெளியீட்டுத் தேதியை மாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிய... மேலும் பார்க்க

நிவின் பாலி - நயன்தாரா படத்தின் வெளியீடு எப்போது?

டியர் ஸ்டூடன்ஸ் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் நிவின் பாலி தயாரித்து நடிக்கும் திரைப்படம் டியர் ஸ்டூடன்ஸ். இப்படத்தை ஜார்ஜ் பிலீப் ராய் மற்றும் சந்தீப் குமார் இணைந்து இய... மேலும் பார்க்க

ஷங்கர் படத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தேன்: பவன் கல்யாண்

இயக்குநர் ஷங்கர் திரைப்படங்கள் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியுள்ளார்.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 ஆம்... மேலும் பார்க்க

பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

பார்டர் - கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் கோப்பையை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது. இதனால் இந்தியா தனது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொட... மேலும் பார்க்க

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 05.01.2025மேஷம்:இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்க... மேலும் பார்க்க

பிரிஸ்பேன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் சபலென்கா-குடா்மெட்டோவா

பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு உலகின் நம்பா் 1 வீராங்கனை அா்யனா சபலென்கா தகுதி பெற்றுள்ளாா். இறுதியில் ரஷியாவின் குடா்மெட்டோவுடன் மோதுகிறாா். ஆஸ்திரேலியாவின... மேலும் பார்க்க