விடுதலை 2: வெற்றி விழா விடியோ வெளியிட்ட படக்குழு!
வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படத்தின் வெற்றி விழா விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் டிச. 20 அன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றி மாறனின் 4 ஆண்டுகால படமாக உருவாகியுள்ள விடுதலை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.
படமும் பல திரைகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றதால் பெரிய வணிக வெற்றி சாத்தியமாகவில்லை. இருப்பினும், இப்படம் ரூ. 50 கோடி வரை வசூலித்து வணிக தோல்வியிலிருந்து மீண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
விடுதலை - 2 திரைப்படத்தின் வெற்றியை இயக்குநர் வெற்றி மாறன், தயாரிப்பாளர், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்பட விடுதலை - 2 குழுவினர் இணைந்து நேற்று கொண்டாடினர்.
இந்த நிலையில் அதன் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இச்சந்திப்பின்போது, வெற்றி மாறனுக்கு பெரிய மாலை அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.