செய்திகள் :

மூவரின் உயிரைப் பறித்த பப்ஜி மோகம்!

post image

பிகாரில் தண்டாவளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடிய 3 இளைஞர்கள் ரயில் மோதி பலியாகினர்.

பிகாரில் மேற்கு சம்பரன் பகுதியில் நார்கடியாகஞ்ச் - முசாஃபர்பூர் இடையேயான ரயில் பாதையில் ஃபுர்கான் ஆலம், மன்ஷா தோலா, சமீர் ஆலம் ஆகிய மூவரும் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு, தண்டவாளத்தில் பப்ஜி விளையாடியதால், ரயில் வருவதை அறியவில்லை. இந்த நிலையில், அவர்கள் மூவர் மீதும் ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மூவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விடியோ கேம் மூலம் ஏற்பட்ட கவனச் சிதறலால் மூவரும் பலியானதையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 வயது மகளைக் கொன்ற வழக்கு: தாய், காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் 8 வயது மகளைக் கொலை செய்த வழக்கில் தாய் மற்றும் அவரின் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூர் நகரிலுள்ள பாவ்பதி கிராமத்தைச் சேர்ந... மேலும் பார்க்க

தில்லியில் தாமரை மலரும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

தில்லியில் தாமரை மலரும் என்று நம்புவதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி அரசை விமர்சித்துப் பேசினார்.தில்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு நமோ பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று ... மேலும் பார்க்க

தற்கொலை நோக்கில் யமுனை ஆற்றில் குதித்த சிறுமியை காப்பாற்றிய போலீஸார்

தில்லியில் தற்கொலை நோக்கில் யமுனை ஆற்றில் குதித்த 15 வயது சிறுமியை போலீஸார் காப்பாற்றியுள்ளனர். தலைநகர் தில்லியில் உள்ள ரூப் நகர் காவல் நிலையத்திற்கு மகள் காணாமல் போனதாக பெண் ஒருவரிடம் இருந்து சனிக்கி... மேலும் பார்க்க

பேருந்து - கார் மோதல்: சபரிமலை சென்ற தமிழக பக்தர்கள் இருவர் பலி!

கொல்லம்: கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சபரிமலை பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர். சபரிமலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு சனிக்கிழமை(ஜன. 4) திருவனந... மேலும் பார்க்க

பறவைக் காய்ச்சல் பாதிப்பு: பலியான சிறுத்தை, புலிகள்!

மகாராஷ்டிரத்தின் நாக்பூர் நகரில் உள்ள கோரேவாடா விலங்குகள் மீட்பு மையத்தில் 3 புலிகளும் ஒரு சிறுத்தையும் பறவைக் காய்ச்சல் பாதிப்பில் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வில... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் டிரோன், ஹெராயின் பாக்கெட்டுகள் மீட்பு!

பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே டிரோன், 2 ஹெராயின் பாக்கெட்டுகளை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். பஞ்சாப் எல்லையில் பஞ்சாப் காவல்துறையுடன் இணைந்து எல்லைப் பாதுகாப்புப் படையும் சனிக்கிழமை கூட்டு ரோந்த... மேலும் பார்க்க