செய்திகள் :

Sakshi Agarwal Wedding: பால்யகால நண்பரை கரம் பிடித்த நடிகை சாக்‌ஷி அகர்வால்!

post image

Sakshi Agarwal Wedding: தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், நாயகியாகவும் இருந்து வருபவர் சாக்‌ஷி அகர்வால். சின்ன திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்‌ஷி தனது பால்யகால நண்பரும் காதலருமான நவ்னீத் மிஸ்ரா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

ஜனவரி 2-ம் தேதி கோவாவில் ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் இவரது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் இரு வீட்டாரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் பதிவில் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாக்‌ஷி.

"சைல்ட்ஹூட் நண்பர்கள் முதல் சோல்மேட்ஸ் ✨ கோவா வானத்தின் கீழ் காதலுக்கும் கடலலைகளுக்கும் இடையே நானும் நவ்னீத்தும் "என்றென்றைக்கும்" இணைந்திருப்பதாக சத்தியம் செய்துள்ளோம் ❤️  இதோ வாழ்நாள் முழுமைக்குமான காதல், சிரிப்பு மற்றும் முடிவில்லாத நினைவுகள்  ✨ #NakshBegins  #ChildhoodToForever " என அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் மட்டுமின்றி, மலையாளம், கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சாக்‌ஷி. இவரது திருமண செய்தி ரசிகர்களுக்கு இனிமையானதாக அமைந்துள்ளது.

பிரபலங்களும், ரசிகர்களும் பிக்பாஸ் சீசன் 3-ன் புகழ்பெற்ற பங்கேற்பாளர் சாக்‌ஷிக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Sakshi Agarwal Wedding
சாக்‌ஷி அகர்வால் திருமணம்
சாக்‌ஷி அகர்வால் திருமணம்
சாக்‌ஷி அகர்வால் திருமணம்

``அப்பா மாதிரி லவ் ஸ்டோரி டைரக்ட் பண்ணனும்னு ஆசை'' - இயக்குநர் ஜீவாவின் மகள் சனா மரியம் ஷேரிங்ஸ்

`12B', `உள்ளம் கேட்குமே', `உன்னாலே உன்னாலே', போன்ற திரைப்படங்களின் மூலம் இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்தவர் இயக்குநர் ஜீவா.அவர் மறைந்தாலும் அவருடைய திரைப்படங்களின் காட்சிகள் இன்றும் ... மேலும் பார்க்க

Nesippaya: "கப்பு முக்கியம்டா தம்பி..." - ஹீரோவாக அறிமுகமாகும் ஆகாஷிற்கு அண்ணன் அதர்வா வாழ்த்து

நடிகர் அதர்வா தம்பி ஆகாஷின் 'நேசிப்பாயா' படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உர... மேலும் பார்க்க

What to watch on Theatre and OTT: பயாஸ்கோப், சீசா, Marco - இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

பயாஸ்கோப் (தமிழ்)பயாஸ்கோப்சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சத்தியராஜ், சேரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பயாஸ்கோப்'. சினிமா பற்றி அறிமுகம் இல்லாத கிராமத்தினர் ஒன்று கூடி ஒரு சினிமா எ... மேலும் பார்க்க