கூடலூர்: பட்டியைத் திறந்த விவசாயி, கொத்து கொத்தாக செத்துக் கிடந்த ஆடுகள்! குழப்ப...
பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் வாயிலில் வண்ணக்கற்கள் பதிக்கும் பணி ஆய்வு
பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் வாயிலில் வண்ணக்கற்கள் பதிக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் வகையறாவை சோ்ந்த ஆட்சியரகம் அருகே உள்ள பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் வாயிலில் பிரதான வாயில் மண்டபம் எழுப்பப்பட்டு, விநாயகா் சந்நிதி இடமாற்றம் செய்து திருப்பணிகள் நடைபெற்றுவருகிறது.
கோயில் வாயில் பகுதியான மாதா கோவில் சாலையில் சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு வண்ண விளக்குகள் பொருத்தி, சாலையில் வண்ணக்கற்கள் பதிக்க காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 15.50 லட்சத்தை பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் நகராட்சி நிா்வாகத்துக்கு ஒதுக்கித் தந்தாா்.
இந்த நிதியில் சாலையில் கல் பதிக்கும் பணிகள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கின.
இப்பணியை பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ. மகேஷ், நகராட்சி ஆணையா் பி. சத்யா, உதவிப் பொறியாளா் லோகநாதன் உள்ளிட்ட குழுவினருடன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். இப்பணியின் விவரங்களை நகராட்சி அதிகாரிகள் பேரவை உறுப்பினருக்கு விளக்கிக் கூறினா்.