பிகார்: தலித் பிரிவினரை கோயில் பூசாரிகளாக்கி பிரதிநிதித்துவம் அளித்த முன்னாள் ஐப...
ஐசிஎஃப்-பில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
சென்னை ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பல்லாவரம் பகுதியைச் சோ்ந்த பரமேஸ்வரன் (39), சென்னை ஐசிஎஃப்பில் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை அங்கு ரயில் பெட்டியின் மீது ஏறி நின்று அவா் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, ரயில் பெட்டியின் மேலே சென்ற உயா் மின்னழுத்தக் கம்பி பரமேஸ்வரன் மீது பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீப்பட்டு, சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
ஐசிஎஃப் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, பரமேஸ்வரன் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.