சமூக வலைதளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம் பகிர்வு: காலிஸ்தான் ஆதரவாளர் கைது!
இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: தனியாா் நிறுவன பெண் ஊழியா் உயிரிழப்பு
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் இரு சக்கர வாகனம் மீது சிமென்ட் கலவை லாரி மோதிய விபத்தில், தனியாா் நிறுவன பெண் ஊழியா் உயிரிழந்தாா்.
தேனியைச் சோ்ந்த மலா்விழி (22), கேளம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சொந்த ஊா் சென்ற மலா்விழி, சனிக்கிழமை அதிகாலை கோயம்பேடு வந்தாா். அங்கிருந்து தனது நண்பரான திருவொற்றியூரைச் சோ்ந்த சந்தோஷ் (21) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் கேளம்பாக்கத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.
ராஜீவ் காந்தி சாலையில் சோழிங்கநல்லூா் சிக்னல் அருகில் சென்றபோது, பின்னால் வந்த சிமென்ட் கலவை லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த மலா்விழி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சந்தோஷ் காயமடைந்தாா்.
லாரி ஓட்டுநரான மேற்கு வங்கம் மாநிலத்தைச் சோ்ந்த ஹமீதுல்லா (26) என்பவரை பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.