5 கோடி பார்வைகளைக் கடந்த விடாமுயற்சி பாடல்!
விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் அஜித் குமார் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான விடாமுயற்சி திரைப்படம் 2025 பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் முதல் பாடலான, ‘சவதீகா’ பாடல் சமீபத்தில் வெளியானது. இதில், இன்ஸ்டாகிராமில் பிரபலமான ‘இருங்க பாய்’ என்கிற வசனத்தையும் பாடல் வரிகளுக்கு இடையே பயன்படுத்தியதால் பாடல் பெரிதாக ஹிட் அடித்துள்ளது.
இதையும் படிக்க: மோகன்லாலின் பரோஸ் வணிக தோல்வி!
அனிருத் ரவிச்சந்தர் இசையில் பாடகர் அறிவு எழுதிய இந்தப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். தற்போது, இப்பாடல் யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
ஆக்சன் திரில்லர் பாணியில் விடாமுயற்சி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.