தேனீக்கள் கொட்டியதில் பொறியாளர் பலி!
ஒடிசாவின் மயூர்பஞ்சு மாவட்டத்தில் தேனீக்கள் கொட்டியதில் பொறியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மயூர்பஞ்சு மாவட்டத்தைச் சேர்ந்த பிஸ்வநாத் முர்மூ (வயது-32) என்பவர் ஊரக வளர்ச்சி துறையில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இன்று (டிச.29) காலை அவர் தனது வீட்டின் வாசலில் நின்றுக்கொண்டிருந்தபோது திடீரென அருகிலிருந்த கூட்டிலிருந்து அங்கு கூட்டமாக வந்த தேனீக்கள் அவரைக் கொட்டி தாக்கின.
இந்த தாக்குதலில் மயங்கிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிக்க: ரயில் மோதியதில் யானை படுகாயம்!
இதனைத் தொடர்ந்து, பிஸ்வநாத்தின் மரணத்தை இயற்கைச் சார மரணமாகப் பதிவு செய்த அம்மாநில காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மயூர்பஞ்ச் மாவட்டம் முழுவதும் பெரும்பாலும் அடர்ந்த காடுகள் நிரம்பிய பகுதிகளாக இருப்பதினால், இதுப்போன்ற பூச்சிகள் மற்றும் வனவிலங்கு தாக்குதல்கள் அங்கு அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.