புத்தாண்டு: தஞ்சை பெரிய கோயிலில் மக்கள் தரிசனம்!
புத்தாண்டை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோல் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையும் படிக்க: பாட்ஷா பட வசனத்தில் ரஜினி புத்தாண்டு வாழ்த்து!
அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் தற்போது தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.