கவாஸ்கரை சந்தித்ததும் காலில் விழுந்த நிதீஷ் குமாரின் தந்தை!
கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை சந்தித்ததும் நிதீஷ் குமாரின் தந்தை முத்யாலா ரெட்டி அவரது காலில் விழுந்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எஞ்சிய ஒருநாள் மட்டும் உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆட வேண்டி உள்ளது. இதனால் பாக்ஸிங் டே டெஸ்ட் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக முதல் இன்னிங்கிஸில் இந்திய அணிையை சரிவிலிருந்து மீட்ட இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டி அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதனிடையே, சதம் எடுக்க ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், நிதீஷ் குமாரின் தந்தை முத்யாலா ரெட்டி, தனது கண்களை மூடி வேண்டிக்கொண்டிருந்த தருணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
4-ஆம் நாள் ஆட்டம் முடிவில் ஆஸி. 333 ரன்கள் முன்னிலை!
தனது மகன் நிதீஷ் குமார் ரெட்டியை பெரிய கிரிக்கெட் வீரராக ஆக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வேலையையும் முத்யாலா ராஜிநாமா செய்திருக்கிறார். இந்த நிலையில் போட்டிக்குப் பிறகு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை சந்தித்ததும் நிதீஷ் குமாரின் தந்தை முத்யாலா ரெட்டி அவரது காலில் விழுந்தார். பின்னர் எழுந்த அவரை, கவாஸ்கர் அரவணைத்துக் கொண்டார்.
இந்த விடியோ இணையத்தில் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றது.