செய்திகள் :

மோகன்லாலின் பரோஸ் வணிக தோல்வி!

post image

நடிகர் மோகன்லாலின் பரோஸ் திரைப்படம் வணிக ரீதியாக பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மோகன்லால் இயக்கத்தின் முதல் படமான பரோஸ் கடந்த புதன்கிழமை கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வந்தது. குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவான இதில் புதையலைக் காக்கும் பரோஸ் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார்.

இப்படம் ரூ. 80 கோடி செலவில் உருவானதாகக் கூறப்பட்ட நிலையில், திரையரங்க வெளியீட்டில் இதுவரை ரூ. 10 கோடி கூட வசூலிக்காமல் திணறி வருகிறதாம். இதனால், இப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைச் சந்திக்கும் என்றே தெரிகிறது.

இதையும் படிக்க: சினிமாவிலிருந்து விலகும் கீர்த்தி சுரேஷ்?

இப்படத்தில் மீரா ஜாஸ்மின், குருசோமசுந்தரம் மற்றும் ஸ்பானிஷ் நட்சத்திரங்கள் பாஸ் வேகா, ரஃபேல் அமர்கோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசையமைத்துள்ளார்.

’முதுகுல குத்திட்டீங்களே..’ புலம்பும் அஜித் ரசிகர்கள்!

விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனத்தை அஜித் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம்... மேலும் பார்க்க

வீட்டில் எந்தெந்த மரங்களை வைக்கலாம், எதை வைக்கக்கூடாது?

இந்த பிரபஞ்சத்தில் உள்ள இயற்கை என்பது முக்கியமான நம்முடைய பிராண சக்தி. பச்சை பசேலென்ற மரம், செடி, மற்றும் கொடிகள் தான் நம்முடைய இயற்கையின் அழகிய ஆபரணங்கள். ஜாதகத்தில் பச்சை என்பது புதன் என்றும் திருமா... மேலும் பார்க்க

பாட்ஷா பட வசனத்தில் ரஜினி புத்தாண்டு வாழ்த்து!

பாட்ஷா திரைப்படத்தின் வசனத்தை பதிவிட்டு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டத்துடன் மக்கள் வரவேற... மேலும் பார்க்க

விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகாது: படக்குழு

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாக... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.01.01.2025 (புதன்கிழமை)மேஷம்:இன்று மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படிய... மேலும் பார்க்க

உலக பிளிட்ஸ் செஸ்: வைஷாலி காலிறுதிக்குத் தகுதி

அமெரிக்காவில் நடைபெறும் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆா்.வைஷாலி, காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றாா்.இந்திய நேரப்படி, திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கிய இந்தப் போட்டியில்... மேலும் பார்க்க