BB Tamil 8: ``பயந்து விளையாடுற அளவுக்கு நீ பெரிய ஆள் கிடையாது"- ரயானைத் தாக்கிய முத்துக்குமரன்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 87 வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் எவிக்ஷனில் ஜெப்ஃரியும், அன்ஷிதாவும் வெளியேறி மீதம் 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இந்த வார எவிக்ஷனிற்கான நாமினேஷன் பட்டியலில் தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா, ரயான், ஜாக்குலின் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
நேற்றைய தினமே போட்டியாளர்களிடையே கடுமையான போட்டி நடைபெற்றது. குறிப்பாக முத்துக்குமரனுக்கும், ரயானிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரோமோவிலும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. '5 பசங்க சேர்ந்து ஒரு ஸ்ட்ராங்கான டீமா உருவாகி ஒரு விஷயம் பண்ணிங்க
அது சத்தியமா நியாயம் கிடையாது. பயந்துதான் இப்படி பண்றீங்க' என்று ரயான் முத்துக்குமரனை சாடுகிறார். 'பயந்து விளையாடும் அளவிற்கு நீ ஒன்றும் பெரிய ஆள் கிடையாது' என்று முத்துக்குமரன் ரயானிடம் கூறுகிறார்.