சதுரிகிரி மலைப்பகுதியில் 58 வகை வண்ணத்துப் பூச்சிகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
’முதுகுல குத்திட்டீங்களே..’ புலம்பும் அஜித் ரசிகர்கள்!
விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனத்தை அஜித் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இதனையொட்டி, படத்தின் முதல் பாடலான, ‘சவதீகா’ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும், புத்தாண்டை முன்னிட்டு இன்று படத்தின் டிரைலர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த லைகா நிறுவனம், சில தவிர்க்க முடியாத காரணத்தால் விடாமுயற்சி பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகுவகுகிறது. விரைவில் மறுஅறிவிப்பு வெளியாகும் என புதிய அறிவிப்பை வெளியிட்டனர். இது அஜித் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதையும் படிக்க: பாட்ஷா பட வசனத்தில் ரஜினி புத்தாண்டு வாழ்த்து!
இதனால், சமூக வலைதங்களில் லைகா நிறுவனத்தை அஜித் ரசிகர்கள் கடுமையாகத் தாக்கி வருகின்றனர். முக்கியமாக, விடாமுயற்சி படத்தால்தான் குட் பேட் அக்லி பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகியது என்பதால் அதையும் காரணமாகச் சொல்லி தகாத வார்த்தைகளால் விமர்ச்சித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையைவிட விடாமுயற்சிக்குக் காத்திருந்த எங்களை, ‘இப்படி முதுகுல குத்திட்டீங்களே’ என தங்களின் வருத்தங்களையும் பதிவு செய்துள்ளனர்.