பிக் பாஸ் 8: பணப்பெட்டியில் ஏமாற்றம்! ஜெஃப்ரியை ஆரத்தியுடன் வரவேற்ற மக்கள்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜெஃப்ரியை மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் ஒருவாரம் நீடித்திருந்தால் பணப் பெட்டியுடன் போட்டியிலிருந்து வெளியேறியிருக்கலாம்.
ஏனெனில் பிக் பாஸ் வீட்டில் போட்டியைத் தொடராமல் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்ற திட்டத்துடன் இருந்த ஒரே போட்டியாளர் ஜெஃப்ரிதான்.
இதனால், அவர் அடுத்த வாரம் வரை நீடித்து பணப் பெட்டியுடன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த வாரமே ஜெஃப்ரி வெளியேறினார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12 வாரங்களை நிறைவு செய்துள்ளது. 83வது நாள் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜெஃப்ரி வெளியேற்றப்பட்டார்.
அவர் போட்டியில் தொடருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்றதாக ஜெஃப்ரி வெளியேற்றப்பட்டார்.
அவர் வெளியேறியதற்கு பிக் பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியாளர்கள் மிகுந்த வருத்தம் தெரிவித்தனர். ஏனெனில் இதற்கு முன்பு, நாமினேஷன் ஃபிரீ டிக்கெட்டை சக போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஜெஃப்ரிக்கு வழங்கி போட்டியில் நீட்டிக்கச் செய்தனர்.
இந்நிலையில் போட்டியில் இருந்து வெளியேரிய ஜெஃப்ரிக்கு விஜய் சேதுபதி உள்பட பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
முதல் நாள் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த ஜெஃப்ரி, இன்று வீடு திரும்பினார்.
சென்னையில் கானா பாடல்களைப் பாடிவந்த ஜெஃப்ரி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழைப் பெற்றதால், அவருக்கு ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்றனர். நண்பர்கள், உறவினர்கள் கூடி அவருக்கு தாரை, தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்றனர். இந்த விடியோ இணையத்தில் பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க | செளந்தர்யாவுக்கு வாக்களிக்க வேண்டாம்: முத்துக்குமரன்