செய்திகள் :

UP: வகுப்பில் ஆபாச வீடியோ பார்த்த ஆசிரியர்... சிரித்த மாணவர்களை ஆத்திரத்தில் தாக்கியதால் கைது

post image
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ஆபாச வீடியோ பார்த்த ஆசிரியர் குல்தீப் யாதவ், 8 வயது மாணவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியர் குல்தீப் யாதவ் தனது மொபைல் போனில் ஆபாச வீடியோ பார்த்ததை மாணவர்கள் கவனித்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட மாணவர்கள் சிரித்துள்ளனர். இதனால் அவமானத்தில் ஆத்திரமடைந்த ஆசிரியர் 8 வயது மாணவனை அடித்து உடலில் காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.

ஆபாச படங்கள்

அந்தச் சிறுவனின் தந்தை ஜெய் பிரகாஷ், இந்தச் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஆசிரியரை கைது செய்துள்ளனர். மேலும், அந்தச் சிறுவனின் தலைமுடியைப் பிடித்து தலையை சுவரில் அடித்ததும், கைத்தடியால் அடித்ததும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஊரக காவல் கண்காணிப்பாளர் கோபிநாத் சோனி கூறுகையில் , “இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொண்டு சட்டப்படி தண்டனை அளிக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.

அநாகரிக செயலில் ஈடுப்பட்டது மட்டுமின்றி, 8 வயது சிறுவனை அடித்த ஆசிரியர் குல்தீப் யாதவைப் பலரும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.

கைதான `பாகுபலி' வால்மிக் கராட் - பஞ்சாயத்துத் தலைவர் கொலை வழக்கில் அமைச்சருக்கு சிக்கலா?

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மசாஜோக் என்ற கிராமத்தைச் சுற்றி காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காற்றாலை உரிமையாளர்களிடம் உள்ளூர் அரசியல்வாதிகள் மிரட்டி பணம் பறிப்பதாகக் குற்றச்சாட்டு இ... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டையில் ஆய்வகம்; சிக்கிய `பார்ச்சூனர்’ வெங்கடேசன் - போதைப் பொருள் கேங்கின் பகீர் பின்னணி

`பார்ச்சூனர்' வெங்கடேசன்?கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை விற்ற பர்மா பஜாரைச் சேர்ந்த திவான் முகமது என்பவர் கைது செய்யப்பட்டார். அவர... மேலும் பார்க்க

வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... சிக்கிய அரசு ஊழியர் - என்ன நடந்தது?

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. கடந்த 30.12.2024-ம் தேதி காவல் கட்டுப்பாட்டறையை தொடர்பு கொண்ட ஆண் ஒருவர், வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாகக்... மேலும் பார்க்க

சென்னை: டியூசன் சென்ற சிறுவன் மாயமான விவகாரம்; ஆசிரியையின் தங்கையுடன் சுற்றுலாவா? போலீஸ் சொல்வதென்ன?

சென்னை எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் கடந்த 16.12.2024-ம் தேதி தன்னுடைய மகனைக் காணவில்லை எனப் பெண்மணி ஒருவர் புகாரளித்தார். அந்தப் புகாரில், "என்னுடைய மகன், அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தா... மேலும் பார்க்க

"உங்க மேல கடத்தல் கேஸ் இருக்கு" - ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் தங்கச் செயினைப் பறித்த போலி போலீஸ்

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (70). இவர், சென்னை மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்தவர், கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் ... மேலும் பார்க்க

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2,447 ஆமைகள்; திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து தங்கம், வெளிநாட்டுப் பணம், சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றைக... மேலும் பார்க்க