செய்திகள் :

வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... சிக்கிய அரசு ஊழியர் - என்ன நடந்தது?

post image

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. கடந்த 30.12.2024-ம் தேதி காவல் கட்டுப்பாட்டறையை தொடர்பு கொண்ட ஆண் ஒருவர், வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி விட்டு போன் இணைப்பைத் துண்டித்தார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்ற போலீஸார் வடபழனி கோயிலில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததால் போலீஸார் நிம்மதியடைந்தனர். இருப்பினும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யாரென்று போலீஸார் விசாரித்தனர்.

போன் மிரட்டல் அழைப்பு

காவல் கட்டுப்பாட்டறைக்கு வந்த செல்போன் நம்பரைக் கொண்டு வடபழனி போலீஸார் விசாரணை நடத்தினர். தேனாம்பேட்டை உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவிந்திரன், வடபழனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் போலீஸார் நடத்திய விசாரணையில் செல்போன் நம்பர் மூலம் கிடைத்த முகவரியில் மிரட்டல் விடுத்த நபர் குடியிருக்கவில்லை. மேலும் அவர் அந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்ற தகவலும் தெரியவந்தது. அதனால் மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க போலீஸார் அடுத்த ஆக்ஷனில் இறங்கினர். மிரட்டல் விடுத்த நபரின் தொடர்புகளை விசாரித்தனர். அப்போது அவர், தனியார் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த வங்கிக்குச் சென்ற போலீஸார், அந்த நபரின் போன் நம்பர் அடிப்படையில் அவரின் முகவரியையும் புகைப்படத்தையும் பெற்றனர். தரமணியில் குடியிருந்த அந்த நபரின் வீட்டுக்குச் சென்று போலீஸார் கதவைத் தட்டியதும் எந்தவித பதற்றமும் இல்லாமல் அந்த நபர் கதவைத் திறந்தார். இதையடுத்து அந்த நபரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயரில் விவேக் மாறன் (35) என்றும் இவர், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர், சம்பவத்தன்று குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தகவலும் தெரியவந்தது. தொடர்ந்து விவேக் மாறனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவேக் மாறனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரின் மனைவி பிரிந்துச் சென்றுவிட்டார். தனிமையால் இதுபோன்ற செயல்களில் விவேக் மாறன் ஈடுபடுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

பக்கத்து வீட்டுக்காரரின் தலையைத் துண்டித்த தந்தை, மகன்; ஊரைக் கலவரக் காடாக மாற்றிய குடும்ப விவகாரம்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நானாசி என்ற கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ் (40). பக்கத்து வீட்டில் வசிப்பவர் குலாப் ராம்சந்திரா. இருவரது குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாள்களாகப் பகை இருந்து... மேலும் பார்க்க

மும்பை: மூத்த மகள் மீது மட்டும்தான் பாசமா... தாயைக் கொன்ற இளைய மகள்; நடந்தது என்ன?

மும்பை குர்லாவில் உள்ள குரேஷி நகரில் வசிப்பவர் ரேஷ்மா காசி (41). இவரது தாயார் சபீரா பானு. இவர் மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் தனது மகனோடு தங்கி இருக்கிறார். சபீரா பானு தனது இளைய மகள் ரேஷ்மாவைப் பார்... மேலும் பார்க்க

விபரீதமான புத்தாண்டு: `இந்தப் பாட்ட மாத்து' சண்டையில் வாலிபர் அடித்துக்கொலை

மும்பையில் நடந்த புத்தாண்டு பார்ட்டி வன்முறையில் முடிந்தது. மும்பை மீரா ரோட்டில் உள்ள மஹாடா குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் உள்ள டெல்டா கார்டனில் புத்தாண்டு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தத... மேலும் பார்க்க

கோவை மேம்பாலத்தில் கவிழ்ந்த எல்பிஜி டேங்கர் லாரி; பள்ளிகளுக்கு விடுமுறை... மீட்புப் பணி தீவிரம்..!

கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை கணபதி பகுதியில் உள்ள குடோனுக்கு ஒரு எல்.பி.ஜி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இன்று அதிகாலை அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் செல்லும்போது ரவுண்டானா சந... மேலும் பார்க்க

வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள்; வெளிநாட்டில் இருந்தபடியே கொள்ளையை முறியடித்த நபர்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் சலீம். இவர் மஸ்கட் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது வீடு கோட்டார் ரஹமத் கார்டன் பகுதியில் அமைந்துள்ளது. வெளிநாட்டில் வேலை பார... மேலும் பார்க்க

கொலையா, தற்கொலையா? - AI முன்னாள் ஊழியர் சுசீர் பாலாஜி மரணத்தில் நடந்தது என்ன? - பகீர் பின்னணி!

'உலகில் 'AI' நிறைய சாதனைகளையும், பெரும் சாகசங்களையும் செய்யும்' என்று பதின் வயதில் கனவு கண்ட இளைஞனின் உயிரை பறித்திருக்கிறது அவர் கனவு கண்ட அதே ஏ.ஐ.ஏ.ஐ மனிதக்குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு என்று ஒரு... மேலும் பார்க்க