பல்லாவரம் - திரிசூலம் இடையே நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பேரவைத் தலைவர் அப்பாவு சந்திப்பு!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜன. 6 ஆம் தேதி தொடங்கவுள்ளதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பேரவைத் தலைவர் அப்பாவு சந்தித்து அழைப்புவிடுத்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 6 ஆம் தேதி திங்கள்கிழமை, காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது.
இதையும் படிக்க | தடையை மீறி ஆர்ப்பாட்டம்: குஷ்பு உள்பட பாஜகவினர் கைது
இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அழைப்பு விடுத்துள்ளார் பேரவைத் தலைவர் அப்பாவு.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக கடந்த டிச. 9-ஆம் தேதி இரண்டு நாள்கள் சட்டப்பேரவை கூடியது குறிப்பிடத்தக்கது.