BB Tamil 8 Day 90: ‘முத்து… நீங்க பண்ற வேலையா இது?’ - விசே காட்டம்; மற்றொரு எவிக...
12 ஆண்டுகளுக்குப் பிறகு... மதகஜராஜா ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்துள்ள படம் மதகஜராஜா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஷால் ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். விஜய் ஆன்டணி இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜன.12ஆம் தேதியன்று படம் வெளிவர உள்ளது.
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் பொருளாதார பிரச்னைகளில் சிக்கியிருந்ததால் படம் வெளியாவதில் தாமதம் ஆனது. 2012இல் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2013இல் நிறைவடைந்தது.
தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் தற்போது இயக்குநராக துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கி வருகிறார். இயக்குநர் சுந்தர். சி கேக்ஸ்டர்ஸ் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து மூக்குத்தி அம்மன்2 படத்தை இயக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.