BB Tamil 8 Day 90: ‘முத்து… நீங்க பண்ற வேலையா இது?’ - விசே காட்டம்; மற்றொரு எவிக...
பக்கத்து வீட்டுக்காரரின் தலையைத் துண்டித்த தந்தை, மகன்; ஊரைக் கலவரக் காடாக மாற்றிய குடும்ப விவகாரம்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நானாசி என்ற கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ் (40). பக்கத்து வீட்டில் வசிப்பவர் குலாப் ராம்சந்திரா. இருவரது குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாள்களாகப் பகை இருந்து வந்தது. நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
உடனே சுரேஷும் அவரது மகனும் சேர்ந்து குலாப்புடன் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் சுரேஷ் தனது மகனுடன் சேர்ந்து கொண்டு கோடாரி மற்றும் அரிவாளால் குலாப் ராமச்சந்திராவின் தலையைத் துண்டித்து அங்குள்ள போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்று போலீஸில் சரணடைந்தார். இதையடுத்து இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்தனர். கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட கிராம மக்கள் சுரேஷ் வீட்டை அடித்து நொறுக்கினர்.
அதோடு சுரேஷுக்குச் சொந்தமான காருக்கும் தீ வைத்தனர். இச்சம்பவத்தால் கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு வன்முறை ஏற்படாமல் இருக்க போலீஸாரும், ரிசர்வ் போலீஸாரும் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். சுரேஷும், குலாப்பும் நேற்று முன் தினம் (ஜனவரி 1) ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அடுத்த நாள் இக்கொலை நடந்திருப்பதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், சமீபத்தில் சுரேஷ் மகள் யாரோ ஒரு வாலிபரைத் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதற்கு குலாப் உதவியதாக சுரேஷ் தரப்பில் சந்தேகப்பட்டுள்ளனர். எனவேதான் ஏற்கனவே இருந்த முன் பகையும் சேர்ந்து கொண்டதால் சுரேஷ் தனது மகனுடன் சேர்ந்து குலாப்பைக் கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் காதலனுக்குத் தீவைத்த பெண்
நாசிக்கில் உள்ள தேவ்லா என்ற இடத்தில் வசிப்பவர் கோரா பச்சாவ் (27) . இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்தார். சமீபத்தில் அப்பெண் பச்சாவ்வுடனான உறவைத் துண்டித்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். ஆனால் சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதற்கு பச்சாவ்தான் காரணம் என்று அப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் நினைத்தனர்.
இதையடுத்து பச்சாவை அப்பெண் தனது வீட்டிற்கு அழைத்தார். வீட்டில் வைத்து அப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து இரும்பு கம்பியால் பச்சாவை அடித்து உதைத்தனர்.
அதோடு அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனால் அவர் அலறியடித்துக்கொண்டு தெருவிற்கு ஓடிவந்தார். பொதுமக்கள் தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக அப்பெண்ணும், உறவினர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...