நட்சத்திர பலன்கள்: ஜனவரி 3 முதல் ஜனவரி 9 வரை #VikatanPhotoCards
மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2,447 ஆமைகள்; திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து தங்கம், வெளிநாட்டுப் பணம், சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றைக் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், சந்தேகத்திற்கு இடமாகத் தெரிந்த பயணியின் உடைமைகளைச் சோதனை செய்தபோது, அதில் சாக்லேட் பெட்டிகளில் மறைத்து உயிருடன் இருந்த 2447 ஆமைகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த ஆமைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆமைகள் கடத்தி வரப்பட்டது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து விமான நிலையத்துக்கு வருகை தந்ததோடு, ஆமைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன, அவை எவ்வகை ஆமைகள் எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...